அய்யர் தாலியை பூஜைக்கு கொண்டு வருகிறார். மீனாவின் தங்கச்சி ”மறுபடியும் உங்களுக்கு கல்யாணம் நடக்கப் போகுது” என்கிறார். ”முதல் தடவை என் கழுத்துல தாலி ஏறும்போது நான் சந்தோஷமாவே இல்ல. இப்ப முழு மனசோட அவர் கையால தாலி கட்டிக்கணும்னு அவ சொன்னா” என்கிறார் மீனாவின் அம்மா.


முத்து, மீனா மாலை மாற்றி மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர். மீனாவின் அம்மா, ”உனக்கு பிடிக்காத கல்யாணத்தை கட்டாயப்படுத்தி பண்ணி வச்சிட்டேனேனு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. இப்போ சந்தோஷமா இருக்குடி மீனா” என்கிறார். பின் முத்துவும் மீனாவும் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.


பின் முத்துவும் மீனாவும்  மாலையும் கழுத்துமாக வீட்டுக்குச் செல்கின்றனர். அண்ணாமலை அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். “ஏங்க இப்போ எதுக்கு இவங்க மாலையை மாட்டிக்கிட்டு வந்து நிக்குறாங்க?” என்கிறார். முத்து உடனே நடந்ததை சொல்கிறார். ”ஏங்க கல்யாணம் ஒரு தடவை தானே நடக்கும்? இவங்க என்ன மொபைல் ரீசார்ஜ் பண்ற மாதிரி மறுபடியும் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறாங்க” என்கிறார். ரவி அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார். மனோஜ் முத்துவை கலாய்க்கிறார்.


”ஏங்க இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சினா அப்போ அன்னைக்கு நடந்தது என்ன பொம்மை கல்யாணமா?” எனக் கேட்கிறார் விஜயா. அதற்கு மனோஜ், ”அப்போ என்ன நீங்க ரெண்டு பேரும் லிவிங் டுகெதர்லயா இருந்திங்க” என்கிறார். அதற்கு முத்து ”நீ ஒரு பொண்ணுகூட சுத்திக்கிட்டு இருந்தியே அந்த மாதிரி நெனச்சியா” என்கிறார். பின் அண்ணாமலை ”ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிங்க இல்ல, அது போதும் எனக்கு” என்கிறார். 


முத்து ”நீங்க எப்போவுமே எனக்கு நல்லது தான்பா பண்ணி இருக்கிங்க” என்கிறார். “இந்த டைம் இவரு என் கழுத்துல தாலி கட்டும்போது எனக்கு சந்தோஷம் மட்டும் தான் மாமா இருந்துச்சி” என்கிறார் மீனா. பின் முத்துவும் மீனாவும் உள்ளே செல்கின்றனர். பின் ரோகினி விஜயாவிடம் ”என்ன ஆண்டி இவங்க ஓவரா பண்றாங்க” எனக் கேட்கிறார். விஜயாவும் முத்து - மீனாவை திட்டிப் பேசுகிறார். பின் “நான் சொன்னதை உங்க மாமா கிட்ட சொன்னியா?” என விஜயா ரோகினியிடம் கேட்கிறார். ரோகினி,  “இவங்க வேற என்ன சொன்னாலும் நம்ம கிட்ட தான் வந்து நிக்குறாங்க” என்று மனதிற்குள் நினைக்கின்றார்.


விஜயா மீனாவிடம் போய் வம்பிழுக்கிறார். “சபதத்தில் என்னை ஜெயிச்சத குத்திக்காட்டதானே இந்த மாதிரி பண்ண?” எனக் கேட்கிறார். மீனா அதிர்ச்சி ஆகி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.