சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளது. 


சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலில் அவர் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் நடித்தும் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானார். இருந்தால் இப்படி ஒரு தோழனாக பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்ற அந்த கேரக்டர் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்படியான நிலையில் திருச்செல்வம் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.


பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எதிர்நீச்சல் சீரியலில் கனிகா, ஹரிப்பிரியா இசை, மதுமிதா, கமலேஷ், சத்யப்பிரியா, விபு ராமன், சபரி பிரசாந்த், காயத்ரி கிருஷ்ணன், பிரியதர்ஷினி, பாம்பே ஞானம், விஜே விமல், சத்யா தேவராஜன் என பலரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் அஸ்திவாரமே ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தின் மூத்த நபராக வரும் ஆதி குணசேகரன் கேரக்டர் தான். முதலில் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நடித்தார். 






ஆனால் கடந்தாண்டு மாரடைப்பு காரணமாக அவர் மறைந்த நிலையில் தற்போது எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். மாரிமுத்து இருந்த காலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் தான் நம்பர் 1 ஆக இருந்தது. அவர் மறைவுக்குப் பின் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. நல்லபடியாக சென்று கொண்டிருப்பதால் எதிர்நீச்சல் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பானது. ஆனால் டிஆர்பியில் அடிவாங்கியதால் 6 நாட்கள் மட்டுமெ ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனைப் பார்த்த அந்த சீரியலின் ரசிகர்கள், “என்னதான் இருந்தாலும் “இந்தாம்மா ஏய்” என தனது கம்பீர குரலால் அனைவரையும் கவர்ந்த மாரிமுத்துவை மிஸ் செய்கிறோம்” என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சீரியலில் நடிக்கும் அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 




மேலும் படிக்க: Actor Manikandan: நடிகனாவதற்கு முன் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் இருந்திருக்கிறேன்: மணிகண்டன் பளிச்!