முத்து தனது மாமனாரின் நினைவு தினத்தையொட்டி, மாமியார் வீட்டிற்கு வருகிறார். முத்து வருவது தெரியாமல் முத்துவைப் பற்றி சொந்தக்காரர்களிடம் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார் மீனாவின் அம்மா. அப்போது முத்து அங்கு நிற்பதை பார்த்து நிறுத்தி விடுகிறார். "பன்றதெல்லாம் பண்ணிட்டு யாரு வர சொன்னது. அடிச்சிட்டு எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு வந்திங்க?" என்கிறார் சத்யா.


முத்துவை திட்டும் அண்ணாமலை:


”என்னடா பெரிய யோக்கியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்கிங்க பேசாம போய்டுங்க” என்கிறார் சத்யா. இதனால் கோபத்தில் முத்து சத்யாவை அடித்து விடுகிறார். கூப்டு வச்சி அசிங்கப்படுத்திட்டிங்க இல்ல என சொல்லி விட்டு முத்து அங்கிருந்து கோபமாக செல்கிறார். 


மீனா வீட்டிற்கு வருகிறார் ”எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என அண்ணாமலை கேட்கிறார். அப்போது முத்து அடித்தது குறித்து மீனா சொல்கிறார். விஜயா அண்ணாமலையிடம் முத்துக் குறித்து கிண்டலாக பேசுகிறார். ”அவன் ஆயிரம் பேசி இருந்தாலும் அதை கேட்டுக்கிட்டு சும்மா தாண்டா இருந்து இருக்கணும் ஏன்னா நீ பண்ண காரியம் அப்படி என முத்துவிடம் சொல்கிறார் அண்ணாமலை. 


லீவு எடுக்க முடியாது ரவி:


”எங்க அப்பாவோட நினைவு நாளை கூட நாங்க நிம்மதியா பண்ணல, எல்லோரும் அழுதுக்கிட்டு  தான் இருந்தோம். இதை பார்த்து எங்க அப்பாவோட ஆத்மாவுக்கு ஒரு அமைதி இல்லாம தானே இருக்கும். என்ன பண்றது எங்கள யார் வேணாலும் அடிக்கலாம் திட்டலாம்னு ஆயிடுச்சு” என்று சொல்லி அழுகிறார் மீனா. ”என் கண்ணு முன்னாடி நிக்காத தள்ளுடா” எனக்கூறி விட்டு அண்ணாமலை கோபமாக செல்கிறார். பின் மீனாவும் முத்துவும் சண்டைப் போடுகின்றனர்.


”இப்படியே போனா இவளே இவ ஆத்தா வீட்ல போய் உட்கார்ந்துக்குவா” என விஜயா மனசுக்குள் நினைக்கிறார். ஸ்ருதி ரவியிடம் ”என் அம்மா நம்ம ரெண்டு பேரும் சைக்கிள்ல போனத நெனச்சி ஃபீல் பண்ணி இருக்காங்க” என்கிறார். ஆலாப்புழா செல்வதற்கு ஒரு கூப்பன் இருப்பதாக கூறி ஸ்ருதி ரவியிடம் காண்பிக்கிறார். ஆனால் தன்னால் லீவு எடுக்க முடியாது என ரவி கூறுகிறார். 


முத்து மாடியில் தூங்க பாய் எடுத்துக் கொண்டு செல்கிறார். அங்கு ஏற்கனவே மனோஜ் இருக்கின்றார். ”ஹால்ல எனக்கு அனல் அடிக்குது” என கூறுகிறார் முத்து. இதனையடுத்து ரவியும் மாடிக்கு தூங்க வருகிறார். ”கல்யாணம் ஆகுற வரைக்கும் தான் நிம்மதி இருக்கும். ஆனதும் பஸ் ஏறி வெளியூர் போய்டும்” என்கிறார் முத்து. ”மேரேஜுக்கு முன்னாடியே லைஃப் நல்லாதாண்டா இருந்தது” என்கிறார் ரவி.  


 மீனா, ரோகினி, ஸ்ருதி 3 பேரும் கிச்சனில் சந்தித்துக் கொள்கின்றனர். மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் அப்டியே டோட்டலா சேஞ்ச் ஆயிடுறாங்க இல்ல” என்கிறார் ஸ்ருதி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.