சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


"பரீட்சை வேற வருது, எழுதலனா இவன் படிப்பு என்ன ஆகும்?" என மீனாவின் அம்மா வேதனைப்படுகிறார். அப்போது அண்ணாமலை மீனாவின் அம்மா வீட்டுக்கு வந்து சத்யாவைப் பார்க்கிறார். சத்யா மற்றும் அவரின் குடும்பத்திற்கு அண்ணாமலை ஆறுதல் சொல்கிறார். ”சத்யா ஏதாவது தப்பு பண்ணி இருந்தா கண்டிக்குறதுக்கு மாமாவுக்கு எல்லா உரிமையும் இருக்கு, ஆனா ஏன் அடிக்கணும்?” என்கிறார் மீனாவின் தங்கச்சி. 


அண்ணாமலை சத்யாவிடம் “எப்பா உங்களுக்குள்ள வேற எதாவது பிரச்னை இருக்கா?” எனக் கேட்கிறார். அதற்கு சத்யா இல்லை மாமா என்கிறார்.“மீனாவோட அப்பா போன கவலையையே, கொஞ்சம் கொஞ்சமா இப்போதான் நாங்க மறந்துக்கிட்டு இருக்கோம். அதுக்குள்ள மாப்பிள்ளை இப்டி பண்ணிட்டாரு” என்கிறார் மீனாவின் அம்மா. அண்ணாமலை மீனாவிடம் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கிறார். பின் பணம் கொடுக்கிறார். அதை மீனாவின் அம்மா வாங்க மறுக்கிறார். 


”என் பொண்ணு பாதுகாப்பா அந்த வீட்ல இருப்பாளானு எனக்கு பயமா இருக்குண்ணா. நாளைக்கு இதே மாதிரி என் பொண்ணையும் அடிப்பாரோனு எனக்கு பயமா இருக்கு” எனக் கூறி மீனாவின் அம்மா அழுகிறார். ”மீனாவ அவன் உயிரா பாக்குறான்மா கண்டிப்பா காயப்படுத்த மாட்டான்” என கூறிவிட்டு அண்ணாமலை அங்கிருந்து புறப்படுகிறார். மனோஜின் பார்க் ஃப்ரண்ட் மனோஜ் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு வருகிறார். ”வட்டிக்கு காசு வாங்கின இல்ல மறந்துட்டியா?” என மனோஜிடம் கேட்கிறார். 


”சம்பளம் வரல அது வந்து இருந்தா நானே தேடி வந்து இருப்பேன் ப்ரோ” என்கிறார் மனோஜ். பின் ஹோட்டலில் ஸ்பெஷலான ஐட்டங்களை எல்லாத்தையும் ஒரு ஒரு ப்ளேட் எடுத்து வர சொல்லி சாப்பிட்டு விட்டு, பார்சலும் வாங்கி கொண்டு காசு கொடுக்காமல் மனோஜை கொடுக்க சொல்லி விட்டுச் சென்று விடுகிறார். மறுபக்கம் விஜயா அண்ணாமலையிடம் அவர் மீனாவின் அம்மாவுக்கு பணம் கொடுக்கச் சென்றது குறித்து கேட்கிறார். அவங்க பணத்தை வாங்கிக்கொள்ளவில்லை என்று அண்ணாமலை கூறுகிறார்.


விஜயா மீனாவிடம் “அவன் உன் தம்பி கைய வேற உடச்சி இருக்கான், அடுத்து உன் கை தான் பார்த்து இருந்துக்கோ” என்கிறார். அண்ணாமலை முத்துவை தனியே அழைத்துச் சென்று சத்யாவின் கையை உடைத்தது குறித்து கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க 


Ethirneechal : ஆணவத்தின் உச்சத்தில் குணசேகரன்: அண்ணனுக்கு சவால் விடும் கதிர்: எதிர்நீச்சலில் இன்று


Reshma Muralidharan : கிழக்கு வாசல் ரேஷ்மா வெயிட் லாஸ் சீக்ரெட் தெரியுமா? அவரே சொன்ன டயட் பிளான் பாருங்க...