ஜீ தமிழில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் 'பூவே பூச்சூடவா'. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா முரளிதரன். அதற்கு முன்னரே ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 நடன நிகழ்ச்சியின் மூலம் பரிச்சயமானவர். முதல் சீரியல் வாய்ப்பே ரேஷ்மாவுக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் மூலம் மிகவும் பாப்புலர் செலிபிரிட்டியாக மாறினார். 



 


ரேஷ்மா - மதன் திருமணம் :


பூவே பூச்சூடவா சீரியலில் நடிகை ரேஷ்மா முரளிதரனுடன் சக நடிகராக நடித்த நடிகர் மதன் பாண்டியனுடன் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர்களின் கேரியரில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் ஜோடியாக பங்கேற்றனர். 


விஜய் டிவி என்ட்ரி :


கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான 'அபி டெய்லர்' சீரியலில் ரேஷ்மாவும், மதனும் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'கிழக்கு வாசல்' சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா. தற்போது அவர் கலந்து கொண்ட நேர்காணலில் தன்னுடைய வெயிட் லாஸ் டயட் பிளான் பயன்படுத்தி எப்படி அவரின் உடல் எடையை குறைத்தார் என்பது பற்றி கூறியிருந்தார். 



 


இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் :


75 கிலோ எடை இருந்த ரேஷ்மா இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் எனப்படும் இடைப்பட்ட உண்ணவிரதத்தை கடைபிடித்து தன்னுடைய உடல் எடையை ஒரே மாதத்தில் 7 கிலோ வரை குறைத்துள்ளார். அதாவது இரவு 8 மணிக்குள் டின்னரை சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் மதியம் 12 மணி வரை எதையுமே சாப்பிடாமல் பாஸ்டிங் இருப்பாராம். இந்த 16 மணி நேர பாஸ்டிங் இருக்கும் சமயத்தில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொள்ளலாம். இந்த முறையை ரெகுலராக பாலோ செய்து தான் தன்னுடைய உடல் எடையை ஒரே மாதத்தில் குறைத்துள்ளார். அதை அப்படி தொடர்ச்சியாக பாலோ செய்ய உடலும் கட்டுக்குள் வந்துவிடும் என்றுள்ளார் ரேஷ்மா முரளிதரன். 


மற்ற டயட் பிளான் :


இது தவிர ரேஷ்மா பெரும்பாலும் பச்சை காய்கறிகள், நல்ல கொழுப்பு சத்துள்ள புரோட்டீன் உணவுகளையும், நல்ல கொழுப்பு சத்து நிறைந்த கிரில் சிக்கன், சீஸ் உள்ளிட்டவை மட்டுமே உட்கொள்வாராம். இடையிடையே இளநீர், மோர் எடுத்துக் கொள்வாராம். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நாட்டு சர்க்கரை மட்டுமே பயன்படுத்துவாராம். இந்த உணவு முறையை மட்டுமே பயன்படுத்தி உடல் எடையை குறைத்துள்ளார்.  யோகா, ஒர்க் அவுட் போல எதையும் ரேஷ்மா மேற்கொள்ளவில்லையாம். இதுதான் அவரின் வெயிட் லாஸ் புரோக்ராம் பிளானில் உள்ள டயட் சார்ட்.