சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 20) எபிசோடில், சக்தி குணசேகரனை எதிர்த்து சவால் விடுகிறான். ”இந்த வீட்டில் இருக்க எங்கள் யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல உங்கள் கண் முன்னாடியே இந்த வீட்டிலேயே இருந்து நாங்கள் ஜெயித்து காட்டுவோம். இனி நீங்க வேற நாங்க வேற” என சக்தி ஆணித்தரமாக சொல்லிவிடுகிறான். கதிரும், ஞானமும், “சக்தி சொல்வது தான் எங்களின் முடிவும். எங்கள் யாருக்கும் உங்களுடைய சொத்து எதுவுமே வேண்டாம். இனிமேல் வெளியில் நாங்கள் குணசேகரன் தம்பிகள் என சொல்லிக் கொள்ளமாட்டோம்” என சொல்கிறார்கள். ”எனக்கும் எதுவும் தேவையில்லை. என்னுடைய தங்கச்சியை தேடி நாங்க கண்டுபிடிச்சுக்குவோம். எங்க அம்மாவையும் நாங்க வெளியில கூட்டிட்டு வருவோம். எனக்கு அப்பா என இனி யாருமே கிடையாது” என தர்ஷனும் சொல்லிவிடுகிறான். ”இனி இந்த வீட்டில் எல்லாமே தனித்தனிதான்” என குணசேகரன் சொல்லிவிடுகிறார்.
ஈஸ்வரியையும் ஜீவானந்தத்தையும் தர்ஷினி பற்றி இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். நாங்க எந்த தப்பும் பண்ணல. நீங்க எத்தனை தடவை கேட்டாலும் எங்களுடைய பதில் இது தான். அந்த வீடியோவில் அவளை யார் அப்படி மிரட்டி பேச வைச்சாங்கனு முதலல தேடுங்க.. என ஈஸ்வரியும் ஜீவானந்தமும் சொல்கிறார்கள். அதை நம்ப போலீஸ் தயாராக இல்லை. மீண்டும் கடுமையாகத்தான் விசாரிக்கணும்போல என சொல்ல ஜீவானந்தம் அவர்களை எதிர்த்து நியாயமாக பேசுகிறார். எங்களை கொச்சைப்படுத்துவது தான் உங்கள் நோக்கமே அதை தவிர தர்ஷினியை தேட எந்த ஒரு ஸ்டெப்பும் எடுக்கவில்லை என ஜீவானந்தமும் சொல்கிறார். ஜீவானந்தமும் ஈஸ்வரியும் எப்படி தர்ஷினியை தேடுவது என பிளான் போடுகிறார்கள்.
முதலமைச்சரை பார்த்து தர்ஷினி கடத்தல் விஷயமாக மனு கொடுக்க சென்னை போக ஏற்பாடுகளை ஜனனி செய்ய அவர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. உடனடியாக ஜனனியும் சக்தியும் சென்னைக்கு கிளம்பி செல்கிறார்கள். அங்கே சென்று நடந்ததை பற்றி சொல்லி உதவி கேட்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நந்தினியின் நகைகளை கழட்டி கொண்டுபோய் தாரா குணசேகரனிடம் கொடுக்கிறாள். அதை பார்த்த குணசேகரன் "என்ன கதிர் என்னை அசிங்கப்படுத்துறியா?" என கேட்கிறார். "உங்க குணம் என்னனு அவ மனசுல பதிஞ்சு போயிருக்கு. இதுக்கு காரணம் நாங்க இல்ல" என நந்தினி சொல்கிறாள். "இந்த பாரு நான் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்குறதால எனக்கு இந்த உலகம் தெரியாதுன்னு நினைச்சுறாத" என கையை நீட்டி கதிர் எதிர்த்து பேச "குணசேகரனை பகைச்சுக்கிட்டு எவனாலும் பொழைக்க முடியாது தெரிஞ்சுக்க" என ஆணவமாக பேசுகிறார் குணசேகரன். அவர்கள் சண்டை போடுவதை பார்த்த விசாலாட்சி அம்மா கண்கலங்கி நிற்கிறார்.
நீதிபதியிடம் ஈஸ்வரி அழைத்து செல்லப்பட்ட போது அவர்களிடம் "என்னோட பொண்ணை கண்டுபிடிக்க அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல மேம்" என சொல்லி கையெடுத்து கும்பிட்டு அழுது கேட்கிறாள். நீதிபதியும் ஈஸ்வரி சொல்வதை பற்றி யோசிக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.