சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


முத்து, ஸ்ருதி ரோஜா மாலையை போட்டு வருவாரா? அல்லது துளசி மாலையை போட்டு வருவாரா? என ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார். பின் ஸ்ருதி இரண்டு மாலையையும் போட்டு வருவதை பார்த்து வாயடைத்துப் போகிறார். விஜயா பங்ஷனில் மீனாவை மட்டம் தட்டி பேசுகிறார். மாலை விஷயத்தில் பெரிய பிரச்சனை வரும்னு நெனச்சேன் என்கிறார் முத்து. ”ரோகிணியும் ரெடி ஆகல அவங்க அப்பாவும் இன்னும் வர்ல. இந்த பொண்ணோட விஷயம் என்னனு தெரியலையே’ என்கிறார் பார்வதி. முத்துவை சண்டை  போட வைப்பதற்காக ஏற்படு செய்த ஆட்கள் மண்டபத்திற்கு வருகின்றனர். 


ஸ்ருதியின் அம்மா ஏற்பாடு செய்த ஆள் வேண்டுமென்றே முத்துவின் காலை பயங்கரமாக மிதிக்கின்றார். முத்து வலி தாங்க முடியாமல் கத்துகின்றார். ஆனால் முத்து அவரிடம் கோபப்படவில்லை. ”உனக்கு கோபமே வரலையா?” என அந்த ஆள் முத்துவிடம் கேட்கிறார். ”ஏண்டா நீ அவன்கிட்ட ஏதோ பேசின அவனுக்கு போபமே வரலையா?” என ஸ்ருதியின் அம்மா கேட்கிறார். 


”அவன் காலை நான் யங்கரமா மிதிச்சேன். அந்த ஆளு சிரிச்சாரு அவர கோவப்படுத்துறது கொஞ்சம் கஷ்டம் தான்” என அந்த நபர் ஸ்ருதியின் அம்மாவிடம் சொல்கிறார்.விஜயா ரோகிணியிடம் ”உங்க அப்பா எப்போ தான் வருவாரு” என கேட்கிறார். ”நான் ஸ்ருதியோட அம்மா அப்பா கிட்ட மலேசியாவுல இருந்து உங்க அப்பா வராருனு பெருமையா சொல்லி இருக்கேன்’ என சொல்கிறார் விஜயா. 


”என்ன கழுத்துல நகையே இல்ல” என விஜயா ரோகிணியிடம் கேட்கிறார். ஸ்ருதி அவ்ளோ நகை போட்டு இருக்கா என்கிறார் விஜயா. விஜயா ரோகிணியிடம் ஒரு நகையை கொடுத்து போட்டுக் கொள்ள சொல்கிறார். வித்யா ஏற்பாடு செய்த ஆள், ”ஆமா நான் சொர்க்கத்துக்கு அனுப்ப வேண்டிய ஆளு யாரு?” என கேட்கிறார். முத்துவை நன்றாக குடிக்க வைக்க வேண்டும் என வித்யா சொல்கிறார். ”பார்ட்டிய பார்த்தாலே தெரியுதே ஆளு என் கேசு தான்’ என அந்த நபர் சொல்கிறார். பின் ரோகிணி குழப்பத்தில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க


Kanguva: என்னது கங்குவா டீசரில் வந்தது நிஜப் புலியா? சைலண்டாக சம்பவம் செய்த கங்குவா கேங்!


Seshu Passes Away: "அச்சச்சோ..அவரா?” திரையில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் சேஷூ காலமானார் - ரசிகர்கள் சோகம்!