சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்துக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் குணசேகரன். சித்தார்த்தும், ஜனனி தங்கை அஞ்சனாவும் காதலித்து வரும் விஷயம் இரு குடும்பங்களுக்கும் தெரியும் என்ற போதிலும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் சித்தார்த்தை மிரட்டி இந்த திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். ஈஸ்வரி, தர்ஷினியின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் குணசேகரன் நிச்சயதார்த்தம் குறித்த முடிவை எடுத்துவிட்டார். 

 

 


 

 

இத்தனை நாட்களாக அப்பாவை எதிர்த்து அம்மா ஈஸ்வரிக்கு ஆதரவாக இருந்த தர்ஷன் தற்போது தர்ஷினி இருக்கும் இந்த மனநிலைக்கு ஈஸ்வரி தான் காரணம் என நினைத்துக்கொண்டு வார்த்தைகளால் ஈஸ்வரியை காயப்படுத்துகிறான். தர்ஷன், ஈஸ்வரியை தூக்கி எறிந்து பேசுவது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. 

 

தர்ஷினியின் எதிர்காலமுமும், அஞ்சனாவின் வாழ்க்கையும் இந்த திருமணத்தில் அடங்கியுள்ளது என்பதால் இதை நான் விடமாட்டேன் என ஜனனி உறுதியுடன் இருந்தாலும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என குணசேகரன் அவளுக்கு சவால் விடுகிறார். இப்படியாக எதிர்நீச்சல் எபிசோட் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. 

 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

நந்தினி  கதிர் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. "ஜீவானந்தம் விஷயம் என்ன நடந்தது என்பது எல்லாம் எனக்கு தெரியும்" என நந்தினி கதிரிடம் சொல்ல கதிர் அதிர்ச்சி அடைகிறான். 

 


 

உமையாள் ஈஸ்வரியிடம் பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைக்க முயற்சி செய்கிறாள். "இதை விட உன்னோட பொண்ணுக்கு பெட்டரான ஒரு பையன் கிடைக்குமா?" என தூக்கிவைத்து பேச "அதுக்கு அவங்களோட விருப்பம் ரொம்ப முக்கியம்" என ஜனனி சொல்கிறாள். தர்ஷினியின் சம்மதம் வேண்டும் என ஜனனி எடுத்து வைத்த பாயிண்டை உறுதிப்படுத்துவதற்காக குணசேகரன் தர்ஷியிடம் சம்மதம் கேட்கிறார்.

 

"உமையாள் உனக்கு அம்மா மாதிரி. உன்னை நல்லா பாத்துக்குவாப்பா. இந்த கல்யாணத்துக்கு சம்மதம் தானே" என தர்ஷினியிடம் கேட்டதும் அவளும் சரி என தலையை அசைக்க குணசேகரன், விசாலாட்சி அம்மா மற்றும் குணசேகரன் சந்தோஷப்படுகிறார்கள்.

 

"என்னோட பிள்ளை சம்மதம் சொல்லிட்டா" என குணசேகரன் சொல்ல ஈஸ்வரி, ஜனனி, சக்தி என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். உமையாள் தர்ஷினிக்கு புடவை கொடுக்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

 


தர்ஷினி உண்மையிலேயே இன்னும் பித்து பிடித்துதான் இருக்காளா? அல்லது குணசேகரனை ஏமாற்றுவதற்கான நாடகமா என தெரியவில்லை. இந்த கல்யாண ட்ராமாவை வைத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு இழுத்தடிக்க போகிறார்கள் என்பது ஒரு குழப்பமாக இருக்கிறது. இந்த பிரச்சனையில் ஜீவானந்தம் பற்றி விசாரிப்பதற்கான முயற்சியை போலீஸ் உட்பட யாருமே எடுக்கவில்லை. பிரச்னை மேல் பிரச்னையாக எதிர்நீச்சலில் (Ethirneechal) தலைதூக்குகிறது. இனி வரும் எபிசோட் கதைக்களம் எதை நோக்கி நகரப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.