சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ குறித்துப் பார்க்கலாம். 


மீனா உள்ளிட்டவர்கள் மாலைக் கட்டிக் கொண்டு இருப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தூங்காமல் இருக்கின்றனர். மனோஜ் அரை தூக்கத்தில் விஜயாவிடம் ”நைட்டுக்குள்ள எல்லா மாலையும் கட்டி முடிச்சிடுவாங்களா?” என கேட்கிறார். அதற்கு மீனா ”கண்டிப்பா எல்லா மாலையும் கட்டி முடிச்சிடுவோம்” என சொல்கிறார். வெளியே குல்ஃபி ஐஸ் விற்கும் சத்தம் கேட்கிறது. உடனே ஸ்ருதி ”ஹேய் எதோ பெல் சவுண்ட் கேட்குது” என்கிறார்.


ரவியும் ஸ்ருதியும் சென்று குல்ஃபி வாங்கி வருகின்றனர். ”எல்லோரும் குல்ஃபி சாப்பிடலாமா?” என ஸ்ருதி கேட்கிறார். பின் அனைவரும் குல்ஃபி சாப்பிடுகின்றனர். சீதா மீனாவிடம் ஒரு குல்ஃபி கொடுத்து சப்பிட சொல்கிறார். ”டைம் ஆயிடுச்சி இல்ல சீதா சீக்கிரம் மாலையை கட்டணும்” என்கிறார் மீனா. பின் முத்து மீனாவுக்கு குல்ஃபியை ஊட்டி விடுகிறார். இதைப் பார்த்து ஸ்ருதியும் ரவியும் சந்தோஷப்படுகின்றனர்.


பின் அனைவரும் தூங்கி விடுகின்றனர். மீனா மட்டும் தூங்காமல் மாலை கட்டிக் கொண்டு இருக்கிறார். முத்து பாதி தூக்கத்தில் எழுந்து மீனாவிடம் ”இன்னும் முடியலயா?”என கேட்கிறார். அதற்கு மீனா ”இல்லிங்க இன்னும் முடியல இன்னும் கொஞ்சம் மாலை தான் கட்டணும்” என சொல்கிறார்.


பின் முத்து மீனாவுக்கு டீ போட்டு எடுத்து வந்து, ”இந்தா குடிச்சிட்டு வேலையைப் பாரு” என சொல்லி கொடுக்கிறார். ”நல்லா இருக்கா?” என முத்து கேட்கிறார். ”ம்” என மீனா சொல்கிறார். முத்து ”எனக்கே இப்போதான் நியாபகம் வருது நான் சர்க்கரையே அதுல போடல” என முத்து சொல்கிறார். அதற்கு மீனா ”நீங்க காட்டுற அக்கறை இனிப்பா” இருக்கு என சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 


நேற்றைய எபிசோடில், ”நீ உள்ள போமா இங்க நெடியா இருக்கும்” என விஜயா ஸ்ருதியிடம் சொல்கிறார். ”எனக்கு மாலை கட்ட கத்துக்கணும்” என ஸ்ருதி சொல்கிறார். பின் மீனா ஸ்ருதிக்கு மாலைக் கட்ட கத்துக் கொடுக்கிறார். ஆனால் ஸ்ருதிக்கு மாலைக்கட்ட வரவில்லை. உடனே இப்போ ”மீனாவுக்கு டப்பிங் பேச வராது இல்ல அந்த மாதிரி தான் இதுவும்” என அண்ணாமலை சொல்கிறார். அதற்கு ஸ்ருதி அப்டியெல்லாம் இல்ல அங்கிள் ”நான் மீனாவை ஒரு நாள் டப்பிங் பேச வச்சேன்” என ஸ்ருதி சொல்கிறார். உடனே ரவியும் “ஆமாப்பா அண்ணி சூப்பரா பேசி இருந்தாங்க” என்கிறார். 


பார்வதி வீட்டுக்கு வருகிறார். அவரிடம் மீனாவின் மாலை ஆர்டர் குறித்து விஜயா கிண்டலடித்துப் பேசுகிறார். அனைவருக்கும் ரவி சமைப்பதாக சொல்லுகிறார். சமைக்க தேவையான பொருட்களை வாங்கி வர மனோஜை அனுப்புகின்றனர். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது.