சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த சில தினங்களாகவே ரோகிணியின் மாமா எப்போது வருவார் என்ற ஆர்வத்தில் குடும்பத்தினர் உள்ளனர். குறிப்பாக விஜயா, ரோகினியின் மாமாவை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று மூச்சுக்கு முன்நூறு தடவை கூறிக்கொண்டே இருக்கிறார். மேலும் ரோகிணியின் மாமாவாக நடிக்க உள்ள ப்ரெளன் மணி மலேசியாவில் இருந்து வருவது போன்ற சட்டையை தைக்க கொடுத்துள்ளதால் ஒருநாள் தாமதமாக வருவதாக ரோகினியிடம் ஏற்கனவே வித்யா கூறியுள்ளார்.


இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரமோவில், மீனா வாசலில் போட்டுள்ள கோலத்தை பார்த்து விஜயா, "என்ன இப்படி கோலம் போட்டு இருக்க. வெல்கம்னு எழுத வேண்டியதுதானே" என மீனாவிடம் கேட்கிறார். அதற்கு பாட்டி, "இப்போ எதுக்கு அவள வெலக்கமாறுன்னு எழுத சொல்ட்ற' என கேட்கிறார். "வெல்கம்னா நல்வரவு" என விஜயா கூறுகிறார். 


ரோகினியோட மாமா வராறு இல்ல என விஜயா, கூற, முத்து, "அம்மா அவரு ஆஸ்திரேலியாவுல இருந்து வராருன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. அவரு மலேசியாவுல இருந்து தான் வராரு” என்று கூறுகிறார். ”மீனா, நீ ஆரத்தியை ரெடி பன்னு” என விஜயா சொல்கிறார். மீனா சரிங்க அத்தை என கூறிவிட்டு செல்கிறார். ரோகிணி, இவங்க வேற ஓவரா பில்டப் கொடுக்குறாங்க என நினைக்கின்றார். 


ரோகினி தன் மாமாவாக நடிக்க உள்ள ப்ரெளன் மணிக்கு கால் செய்து, ”இங்க எல்லோரும் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என கூறுகிறார். அதற்கு அவர், ”அதுக்கு தானே 5 மணில இருந்து இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கேன்” (சாலையோரம் உள்ள மைல்கல் மீது அமர்ந்து கொண்டு பேசுகிறார்) என கூறுகிறார். அதற்கு ரோகிணி ”வந்து தொலைய வேண்டியதுதானே” என கூறுகிறார். அதற்கு அவர், ”இந்த மாதிரி பில்டப் எல்லாம் கொடுக்கணும் எப்படி எண்ட்ரி கொடுக்குறேன்னு பாரு”என்கிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 


ரோகிணியின் மாமா வீட்டிற்கு வந்ததும் விஜயா வழக்கம்போல் பில்டப் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் புது துணி ப்ரேஸ்லெட் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதால், மீனாவை இன்சல்ட் செய்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கதைக்களம் இப்படி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ரோகிணி எப்போது வீட்டில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க 


Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் பிக்பாஸ் சரவண விக்ரம்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!


Today Movies in TV, January 21: பொல்லாதவன் முதல் அசுரன் வரை.. டிவியில் இன்றைய சண்டே படங்கள் என்னென்ன?