பிரபல சின்னத்திரை நடிகர் சரவணன் விக்ரம் தான் நடிப்பு தொழிலில் இருந்து விலகுவதை குறிக்கும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியை சேர்ந்த சரவணன் விக்ரம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஒரு யூட்யூபர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் சமையல் மற்றும் பயணம் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் தான் சீரியலில் களமிறங்கி மேலும் பிரபலமானார் சரவண விக்ரம். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 இல் பங்கேற்று ஜெயித்தார்.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் சின்னத்திரை விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகர் என்ற விருதை பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்காக சரண விக்ரம் பெற்றிருந்தார். இதற்கிடையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் 23 போட்டியாளர்களில் ஒருவராக சரவண விக்ரம் கலந்து கொண்டு இருந்தார். ஆரம்பம் முதல் அந்த வீட்டில் அமைதியான மனிதராக வலம் வந்த அவர், தன்னுடைய கேமை விளையாடாமல் சக போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்வதை வேலையாக கொண்டிருந்ததாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 17ஆம் தேதி சரண விக்ரமின் தங்கை சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் ஒரு மணி நேர எபிசோடு வைத்து என் அண்ணனை தவறாக நினைக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார். அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவண விக்ரம் தான் டைட்டில் வின்னர் என தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வீடியோக்களும் இணையத்தில் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானது.
84 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த சரவணன் விக்ரம் அதன்பின் வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் கடைசி வாரத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மீண்டும் உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வரை ஒருவித குழப்பத்திலேயே சரவண விக்ரம் இருந்ததாகவும் எந்தவித டாஸ்கிலும் பெரும் ஆர்வம் கொண்டு பங்கேற்கவில்லை எனவும் அவரது ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டனர்.
இப்படியான நிலையில்தான் சரணம் விக்ரம் தனது instagram பக்கத்தில் "I Quit My Passion" என்ற பதிவு ஒன்றை வெளியிட்டு அதனை நீக்கியுள்ளார். . மேலும் அதில் எல்லோருக்கும் நன்றி என்ற கேப்டனும் இடம் பெற்றிருந்தது. இதனால் தனது கனவான நடிப்பை விட்டு விட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்த உண்மையை சரவண விக்ரம் தெரிவித்தால் மட்டுமே என்ன நடந்தது என்பதை வெளி உலகத்திற்கு தெரிய வரும்.