ரோகினி வீட்டிற்கு மனோஜ், மீனா, முத்து ஆகியோர் சென்றுள்ள நிலையில், ரோகினி எங்கே அவர்கள் நம்மை பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருக்கிறார். ரோகினியின் அம்மா அவரிடம் சென்று “மாப்பிளைக்கு டீ பிடிக்குமா. காபி பிடிக்குமா” என கேட்கிறார். இதனையடுத்து அவர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுக்கிறார்.
மீனா, ரோகினியின் பெயரை சொல்லி உங்களுக்குத் தெரியுமா என விசாரிக்கிறார். ரோகினியின் அம்மா, எனக்குத் தெரியாது எனக் கூறுவதுடன் “அவங்க இங்க தான் வந்து இருப்பாங்க”னு என்ன நிச்சயம் என கேள்வி கேட்கிறார். மனோஜ் ரோகினியின் போட்டோவை காண்பித்து “நல்லா நியாபகப்படுத்தி சொல்லுங்க, இங்க ரோகினி யார் வீட்டுக்காவது வந்து இருக்காங்களா?” எனக் கேட்கிறார். அவங்க பார்த்துட்டு, இல்லை என சொல்கிறார். உடனே ரோகினியின் மகன், “பாட்டி நான் பார்க்குறேன்” எனக் கேட்கிறார். அதற்கு ரோகினியின் அம்மா, ”சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது” என சொல்கிறார்.
உடனே மனோஜ், ”அவக்கிட்ட நான் பொய் சொல்லி இருக்க கூடாது” எனக்கூறி அழுகிறார். “நான் செஞ்ச தப்புக்கு அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்” எனக் கூறுகிறார். “அவ எங்க இருந்தாலும் அவள நான் தேசி போவேன்” என்றும் சொல்கிறார். ரோகினின் குழந்தை “அழாதிங்க அங்கிள்” எனக்கூறி மனோஜின் கண்ணீரை துடைத்து விடுகிறது. ரோகினியின் அம்மா, “அவங்க உங்களை தேடி வருவாங்க அழாதிங்க” எனக் கூறுகிறார். “நீங்களும் அவங்கள தேடாதிங்க அவங்க வருவாங்க நம்பிக்கையோட இருங்க” என மீனா-முத்துவிடம் கூறுகிறார்.
மானோஜ், முத்து-மீனா புறப்படுகின்றனர். “நீ சொன்னத வச்சி மாப்ள தான் ஏதோ தப்பு பண்ணிருக்காருனு நெனச்சேன். பாவம்டி அந்த மனுஷன் தங்கம்” எனக் கூறுகிறார். “உனக்கு அமச்சி கொடுத்த வாழ்க்கை தான் தப்பா போச்சி, நீயா ஒரு வாழ்க்கை அமச்சிக்கிட்ட இப்டி ஒரு குடும்பம் யாருக்கும் கிடைக்காது. உனக்கு கிடச்சிருக்காரு” என கூறுகிறார். அதற்கு ரோகினி, “உங்க கூடயும் க்ரிஷ் கூடயும் இங்கேயே இருந்துடுறேனே” என்கிறார். “இப்போ மட்டும் உங்களுக்கு என்ன எங்க மேல அக்கறை. நீ உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழு” எனக்கூறுகிறார்.
மனோஜ், முத்து-மீனா எங்குத்தேடியும் ரோகினி கிடைக்காததால், மீனா மனோஜை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வீட்டிற்கு வந்ததும் அங்கு மனோஜூம் முத்துவும் சண்டைப்போட்டுக் கொள்கின்றனர். பார்த்தால் ரோகினி திடீர் என எண்ட்ரி கொடுகிறார். விஜயா, “அவ அப்போவே வந்துட்டா” எனக் கூறுகிறார். அப்போது ரோகினி, “எனக்கும் உங்க எல்லோரையும் விட்ட வேற யாரு இருக்கா” எனக் கூறுகிறார். “எல்லோரும் ஒன்னா வாழனும்னுதான் நினைக்கிறோம், ஆனா அவரு இப்படி மனோஜை இன்சட்ல்ட் பன்னி பேசினா” என ரோகினி கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.