ரோகினி, மனோஜுக்காக வாங்கிட்டு வந்த தோசையை முத்து தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விடுகிறார். "அடுத்தவங்களுக்காக வச்சி இருக்குறத எடுத்து சாப்பிட கூடாதுன்ற மேனர்ஸ் கூட இவருக்கு தெரியல" என ரோகினி சொல்கிறார். "தோசையே  பார்க்காத மாதிரி எங்க இருந்தாலும் எடுத்து சாப்ட்டுடுவியா?" என மனோஜ் கேட்கிறார்.


உடனே மீனா, "ரோகிணி என்ன சொன்னிங்க. மேனர்ஸா, அது உங்களுக்கு இருக்கா?" என கேட்கிறார். "அண்ணன் தம்பிங்களுக்குள்ள சண்டை இல்லனாலும் நீயே பத்த வச்சிடுவியே அமைதியா இரு" என்கிறார் அண்ணாமலை. "என்னைக்குமே முத்து அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறவன் கிடையாது. அவன் தெரியாம பண்ணிட்டான்" என்கிறார் அண்ணாமலை. 


மீனாவுக்கு முத்து தந்துரி சிக்கின் வாங்கி கொடுத்தது குறித்து விஜயா பேசுகிறார். முத்துவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார் அண்ணாமலை. "ஒன்னு எல்லோருக்கும் வாங்கி இருக்கணும். இல்ல உங்க ரூம்குள்ள வச்சி சாப்பிட்டு இருக்கணும்" என்கிறார் அண்ணாமலை. ரோகிணி சாரி சொல்கிறார். "அங்கிள் ஒரு தோசைக்கு எதுக்கு எல்லோரும் சேர்ந்து டிபேட் பண்ணிக்கிட்டு இருக்கிங்க" என்கிறார் ஸ்ருதி. 


விஜயா தன் தோழி பார்வதியிடம் "இந்த முத்துவாலயும் மீனாவாலயும் வீட்ல எதாவது பிரச்சனை வந்துகிட்டே இருக்கு" என்கிறார். மீனாவையும் முத்துவையும் குறை சொல்லி பேசுகிறார் விஜயா. ”இந்த முத்துவால எங்க அவங்க ரெண்டு பேரும் வீட்ட விட்டு வெளியே போய்டுவாங்களோனு பயமா இருக்கு” பார்வதி என்கிறார் விஜயா. பின் விஜயாவும் பார்வதியும் மனோஜ் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சாப்பிட செல்கின்றனர். 


மனோஜ் தன் அம்மாவை பார்த்து விடுகிறார். மனோஜ் வேறு ஒருவரிடம் ஆர்டர் எடுக்க சொல்லிவிட்டு வாஷ் பேஷன் பக்கத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அப்போது பார்வதி அங்கு கை கழுவ செல்கிறார். மனோஜ் டாய்லெட்டில் சென்று ஒளிந்து கொள்கிறார். முத்து கொஞ்சம் கொஞ்சமாக முத்துவை மாற்றிக் கொண்டிருப்பதாக சொல்கிறார் விஜயா. 


ஹோட்டல் ஓனர், கஸ்டமர்ஸ் வந்து இருக்காங்க இந்த மனோஜ் எங்க போனான் என்று கேட்கிறார். அதற்கு விஜயா, ”என் பையன் பேரை வச்சிக்கிட்டு ஆர்டர் எடுக்குற வேலை செய்யுறான்” என்று கூறுகிறார். பின் மனோஜ் வேறு வழி இன்றி முகத்தில் மாஸ்க் மாட்டிக் கொண்டு அவர் அம்மாவின் அருகில் உள்ள டேபிளில் சென்று ஆர்டர் எடுக்கிறார். 


பி.ஏவுக்கு பணம் கொடுப்பதற்காக பர்சனல் லோன் வாங்கி உள்ளதாக ரோகிணி தன் தோழி வித்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வீட்டை விட்டு தனியே வர சொல்லி ரோகிணிக்கு வித்யா ஐடியா கொடுக்கிறார். தனக்கு கூட்டு குடும்பத்தில் வாழ ஆசை என்று ரோகிணி பதில் கூறுகிறார். பின் முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார் ரோகிணி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.