சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய ப்ரோமோ குறித்து பார்க்கலாம்.
ஸ்ருதி சாலையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது விச்சு, ”நான் இருக்கும்போது நீ ஏன் மா தனியே போற வா” என ஸ்ருதியின் கையைப் பிடித்து இழுத்துச் செல்கிறார். அப்போது முத்து ஓடி வந்து நிதினை அடிக்கிறார். ”என் மேல எவ்ளோ வேணுனாலும் கோவப்பட்டுக்கோ, ஆனா என் தம்பிய தண்டிக்காத.. அவன் பாவம், நீ வந்தா தான் வீட்டுக்கு வருவேனு உட்கார்ந்து இருக்கான்” என முத்து ஸ்ருதியிடம் சொல்கிறார்.
ஸ்ருதி வீட்டுக்குள் நுழைந்ததும், தன் ஹேண்ட் பேக்கை தூக்கி வீசி விட்டு ”மம்மி, முத்து மட்டும் வர்லனா, விச்சு என்னை எதாவது பண்ணி இருப்பான்” என்கிறார். ”அந்த முத்துவோட வேலையா தான் இருக்கும்” என ஸ்ருதியின் அப்பா சொல்கிறார். ”ஸ்டாப் இட் அச்சா. அன்னைக்கு நீங்க தான் மீனாவ தேவையில்லாம பேசி இருக்கிங்க. அந்த வீட்ல எல்லோரும் என்னை எவ்ளோ கேர் பண்ணி பார்த்துக்குறாங்க தெரியுமா? நான் இங்க வந்திருக்கவே கூடாது. ரவி இருக்குறது தான் என் வீடு, நான் கிளம்புறேன்” என சொல்லி விட்டு ஸ்ருதி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
ஸ்ருதிக்கும், ரோகிணிக்கும் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் ஒன்றாக நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது முத்துவை வைத்து எதாவது பெரிய சண்டையை ஏற்படுத்தி அதன் மூலம் ஸ்ருதியையும், ரவியையும் வீட்டிற்கு பிரித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் திட்டம் வைத்திருந்தனர். முத்துவை எவ்வளவு கோபப்படுத்தியும் முத்து கூலாக இருந்தார்.
மறுப்பக்கம் ரோகிணி, மலேசியாவில் இருந்து தன் அப்பா வருவதாக பொய் சொல்லி இருந்த நிலையில் அதை சமாளிப்பதற்காக முத்துவை வைத்து கேம் ஆட திட்டம் தீட்டி இருந்தார். இந்நிலையில் ஸ்ருதியின் அப்பா, மீனா தங்க செயினை திருட முயன்றதாக அவர் மீது பழி போட்டார். இதனால் முத்துவுக்கும் ஸ்ருதியின் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடயே கோபமடைந்த முத்து ஸ்ருதியின் அப்பாவை அடித்து விட்டார். இதனால் ஸ்ருதி தன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் எப்போது ரவியும் ஸ்ருதியும் மீண்டும் அண்ணாமலை வீட்டுக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க