சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
”மீனா உழைத்து சம்பாதிக்கின்ற பொண்ணு” என அண்ணாமலை சொல்கிறார். அதற்கு வாசுதேவன் ”எனக்கு உன்னை பத்தியும் தெரியும் உன் குடும்பத்தை பத்தியும் தெரியும்” என சொல்கிறார். ”திருடுற எண்ணம் எல்லாம் அவளுக்கு எப்பவுமே கிடையாது அப்படி நெனச்சி இருந்தா, உங்க பொண்ணோட நகையெல்லாம் வீட்ல தானே இருந்துச்சி திருடி இருக்க மாட்டாளா?” என முத்து கேட்கிறார்.
அதற்கு வாசுதேவன் ”அங்க திருட முடியலனு இங்க வந்து திருடினாளா? திருட்டு குடும்பத்துல இருந்து வந்தவங்க வேற எப்டி இருப்பாங்க” என்கிறார் அண்ணாமலை. முத்துவை பார்த்து ”ஏய் நிறுத்து உனக்கு ஏத்த மாதிரி தான் ஒருத்தி வந்து இருக்கா” என்கிறார் வாசுதேவன். ”காசுக்காக எங்க நகையை திருடி தான் உன் புருஷனுக்கு குடிக்க குடுப்பியா?” என்றும் கேட்கிறார். இதனால் கோபத்தில் வாசுதேவனை முத்து அடித்து விடுகிறார். ”எங்க அப்பாவ அடிக்குற என்ன நெனச்சிக்கிட்டு இருக்க நீ?” என ஸ்ருதி கேட்கிறார். உடனே ஸ்ருதியின் அம்மா முத்துவை திட்டுகிறார். ”அவரு வயசுக்கு கூட மரியாதை கொடுக்காம கைய நீட்டி அடிச்சி இருக்கான்” என்கிறார்.
ரவி முத்துவிடம் சண்டைக்கு வருகிறார். ”என்ன பேசுனான்னு முதல்ல அந்த ஆள கேளு” என்கிறார் முத்து. பின் ”இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையாடி” என ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியிடம் கேட்கிறார். ”உன் அப்பாவ அடிச்ச வீட்டுக்கு நீ போகணுமானு யோசிச்சிக்கோ” என வாசுதேவன் ஸ்ருதியிடம் சொல்கிறார். ”விஜயா ஸ்ருதியிடம் சென்று நீ ஒன்னும் நெனச்சிக்காத நம்ம வீட்டுக்கு போகலாம் வா” என்று கூப்பிடுகிறார்.
ஆனால் ஸ்ருதி போகவில்லை. ”இனி எங்க அப்பாவ பத்தி என் மாமியார் கேட்கவே மாட்டங்க” என ரோகிணி சொல்கிறார். விஜயா அண்ணாமலையிடம் முத்துவை பற்றி திட்டி பேசுகிறார். ரோகிணியும், மனோஜும் முத்துவை பயங்கரமாக குறை சொல்கின்றனர். முத்து மீதுதான் தப்பு என சொல்கின்றனர். ”என் புள்ள அங்க போயி வீட்டோட மாப்பிள்ளையா இருக்க போறான்” என விஜயா சொல்கிறார். ”நீ அதிகம் கற்பனை பண்ண வேண்டாம்” என அண்ணாமலை சொல்கிறார். ரவி அண்ணாமலைக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது ரவி ”எனக்கு என்னவோ அண்ணி மேல தான் பா டவுட்டா இருக்கு” என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க
Thalapathy Vijay: அஜித்துக்கு “V” எழுத்து ராசி.. அப்ப விஜய்க்கு எந்த எழுத்து ராசி தெரியுமா?
Vijay Deverakonda: வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய விஜய் தேவரகொண்டா.. அவருக்கு அவரே கொடுத்த தண்டனை!