விஜய் டிவி புதுமையான ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது. அதே போல எந்த ஒரு காம்ப்ரமைஸும் இல்லாமல் மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன விஜய் டிவியில் சீரியல்கள். மதியம் முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 


புதிய டைம் ஸ்லாட் :


அந்த வகையில் விஜய் டிவியில் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் டைம் ஸ்லாட் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. மிகவும் பரபரப்பான கட்டத்தில் அதிரடியாக மாலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'ஆஹா கல்யாணம்' சீரியல் இனி 7.30 மணிக்கும், 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'ஈரமான ரோஜாவே 2 ' இனி இரவு 9.30  மணிக்கும், 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'மகாநதி' சீரியல் மாலை 7.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல்களின் நேர மாற்றம் வரும் திங்கள் முதல் ஆரம்பமாக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது சேனல்.


 



பிக் பாஸ் சீசன் 7:


அக்டோபர் மாதம் முதல் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்க இருக்கும் காரணத்தால் தான் இந்த சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. கடந்த பிக் பாஸ் சீசன் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது போலவே இந்த சீசனும் அதே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 'பிக் பாஸ் சீசன் 7 ' துவங்கலாம் என திட்டமிட்டுள்ளனர். 


பாண்டியன் ஸ்டோர்ஸ் :


ஒரு வேளை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முடிவுக்கு வந்தால் தற்போது 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'கிழக்கு வாசல்' தொடர் இரவு 8 மணிக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவு குறித்து இதுவரையில் எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாக வில்லை.


அதே போல 'ஈரமான ரோஜாவே 2' முடிவுக்கு வர உள்ளது என இணையத்தில் பரவிய தகவலுக்கு தற்போது வெளியாகியுள்ள அதன் நேர மாற்ற அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே போல இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்கள் வெகு சிறப்பான வரவேற்பை பெற்று டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருப்பதால் அந்த தொடர்களில் எந்த மாற்றமும் இன்றி அதே நேரத்தில் ஒளிபரப்பாகும். 


சின்னத்திரை ரசிகர்களின் அபிமான தொடர்களின் நேர மாற்றம் விஜய் டிவி ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. நாளை முதல் விஜய் டிவியில் இந்த புதிய டைம் ஸ்லாட்டில் மாற்றப்பட்ட சீரியல்களை கண்டு ரசிக்கலாம்.