சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா தன்னுடைய நகைகளை யாராவது ஒரு மகனுக்கு தான் கொடுக்க வேண்டும், அது யாராக இருக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்" என சொல்லி ஒரு ட்ராமா போட்டார் குணசேகரன்.
ஆனால் எதற்கும் அசராத விசாலாட்சி அம்மா மறுபடியும் நகைகளை கொண்டு போய் சக்தியிடம் கொடுத்து "இந்த நகை உனக்கு தான். இதை வைத்து தொழிலை தொடங்கி நல்லபடியாக மேலே வாங்க" என சொல்லிவிடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன் முகத்தில் ஈ ஆடவில்லை.
சமயலறையில் ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா கொடுத்த அந்த ட்விஸ்ட் பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் தர்ஷன் மற்றும் தர்ஷினி வந்து இனிமேல் நாங்கள் அந்த ஆளுடைய காசில் படிக்க விரும்பவில்லை. அதனால் நாங்கள் காலேஜுக்கும் ஸ்கூலுக்கும் போக போவதில்லை என கூறுகிறார்கள். அதை கேட்டு ஈஸ்வரி என்னுடைய குழந்தைகள் தன்மானத்தோடு இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என சொல்லி கண்கலங்குகிறாள். "நான் உங்களை எப்படியாவது படிக்க வைக்கிறேன்" என சொல்லி அனுப்பி வைக்கிறாள்.
அந்த சமயத்தில் ஜீவானந்தம் மகள் வெண்பா ஈஸ்வரிக்கு போன் செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை சொல்கிறாள். அதை கேட்டு ஈஸ்வரி பூரித்து போகிறாள். பின் ஒவ்வொரு குழந்தையாக வந்து அவர்களுடைய அம்மாக்களுக்கு மதர்ஸ் டே வாழ்த்துக்களை சொல்கிறார்கள். ஜனனி தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் நினைத்து வேதனை படுகிறாள். அவளுக்கு சக்தி ஆறுதல் சொல்கிறான். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
"எனக்கு சக்தி தான் வேணும் என்ற எண்ணம் என்னோட மனசுக்குள்ள இருக்கு. உனக்கு சக்தி" என சக்தியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள் சக்தி. "நீ என்கூட இருக்குறது மட்டும் தான் என் வாழ்க்கை" என சொல்லி ஜனனியை அணைத்து கொள்கிறான் சக்தி.
மறுநாள் காலை நந்தினி ஹோம் ஏஜ் சமையல் ஆர்டருக்காக உணவுகளை எல்லாம் சமைத்து தயாராக வைத்து இருக்கிறாள். "முதல் நாள் நல்ல படியாக போகட்டும் அப்புறமா பக்குவமா பார்த்து சொல்லிக்கலாம்" என்கிறாள் நந்தினி. அந்த நேரம் பார்த்து கரிகாலன் அங்கே வந்து "என்ன சின்ன அக்கா தம்பிக்கு தெரியாம ஏதாவது திருட்டுத்தனம் பண்றீங்களா" எனக் கேட்கவும், அனைவரும் திருதிருவென முழிக்கிறார்கள். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்து கேட்காமலே செய்து வைத்துள்ள உணவு பாத்திரங்களை திறந்து பார்க்கிறான். இது தான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட்.