விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம். 


சாமியப்பனின் 60வது கல்யாண வைபவ நிகழ்வுக்காக அனைவரும் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சிறப்பான நிகழ்வை ஆவணமாக எடுக்க ரேணுகாவின் தோழி வந்துள்ளார். அவர் பயணத்தின் போது 60வது கல்யாண வைபவம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சாமியப்பனிடம் கேட்க, அவர் நீண்ட விளக்கம் ஒன்றை அளிக்கிறார். 


இதனைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் அப்பெண் அறிமுகம் செய்ய சொல்கிறார். முதலில் தனது மூத்த மகன் நடேசனை அறிமுகம் செய்யும் சாமியப்பன், அதுக்கு முன்னாடி என் மருமகள் பார்வதி பற்றி சொல்லணும் என கூறுகிறார். உடனே பார்வதி, தான் இந்த வீட்டுக்கு எப்படி மருமகளா வந்தேன் என்பதை பிளாஸ்பேக் காட்சிகளாக விவரிக்கிறார். 


பார்வதி சாமியப்பன் நண்பனின் மகள். அவரின் கல்யாணத்துக்கு சாமியப்பன் குடும்பத்தோடு செல்கிறார். அப்போது நகை வரும் வழியில் ஆட்டோவில் தொலைந்து விட்டதாக பார்வதி அப்பா மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவிக்கிறார். இதனை நம்ப மறுக்கும் மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்தை நிறுத்துகின்றனர். அதேசமயம் இதையெல்லாம் கவனிக்கும் சாமியப்பன் தன் மனைவி சிவகாமி மற்றும் மகள் ரேணு அணிந்திருந்த நகைகளை வாங்கி மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுத்து திருமணத்தை நடத்த சொல்கிறார். 



அதற்குள் ஷண்முகம் உதவியால் தொலைந்துபோன நகைகள் கிடைக்கிறது. ஆனால் இம்முறை பார்வதி திருமணம் செய்ய மறுக்கிறார். நகைக்காக ஆசைப்பட்டவர்களால் தன் வாழ்க்கை பாழாகலாம் என நினைக்கிறார். அவரின் முடிவை பார்வதி அப்பா ஏற்றுக் கொள்ளா விட்டாலும், சாமியப்பன் பாராட்டுகிறார். மேலும் தன் வீட்டுக்கு மருமகளாக வருமாறு அழைக்கிறார். நடேசனை கூப்பிட்டு அவரின் விருப்பத்தை கேளாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். 


அடுத்ததாக இரண்டாவது மகன் மாணிக்கத்தின் கதை சொல்லப்படுகிறது. ஸ்கூல் டீச்சராக வேலை செய்யும் மாயாவை விபத்தில் இருந்து மாணிக்கம் காப்பாற்றுவதால் அவர்களுக்கு காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து சாமியப்பன் தனது தங்கை மங்கை பற்றி பேசுகிறார். காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு தனது தந்தையால் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும், கணவர் இறந்த பின் தன்னுடைய வீட்டில் இருக்கும் நிகழ்வுகளையும் கூறுகிறார். மேலும் அவரின் மகன் ஷண்முகம், மகள் மலர் இருவர் பற்றியும் பேசும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.