சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா, ஐஸ்வர்யாவின் பள்ளிக்கு சென்று பரதம் சொல்லி தருவதற்காக தயாராகி கொண்டு இருக்கிறாள். அதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டு இருக்கிறாள்.


அனைவரும் டைனிங் ஹாலில் உட்கார்ந்து காபி குடித்து கொண்டு இருக்கிறார்கள். நடுராத்திரி வந்தால் அனைவரும் குணசேகரனை நலம் விசாரிக்கிறார்கள். அப்போது கரிகாலன் வந்து இங்க இருக்குற கோயம்புத்தூர் போக ஏன் உங்களுக்கு இவ்வளவு நேரமானது. விடிய காலையில் கிளம்பிய நீங்கள் அங்கே போய் சேர எப்படி இரவாகும்? அந்த நேரத்துக்கு நீங்க சென்னைக்கே போயிருக்கலாம்.. என சொல்லவும் கதிரும் குணசேகரனும் அதிர்ச்சி அடைகிறார்கள். மற்றவர்களுக்கு  குழப்பமாக இருக்கிறது. 



ரேணுகா யாரும் பார்த்து விடக்கூடாது என நைசாக எஸ்கேப்பாக முயற்சி செய்கிறாள். ஆனால் ஞானம் அவளை நிறுத்தி போகவிடாமல் கேள்வி கேட்கிறான். ஐஸ்வர்யாவுக்கு யூனிபார்ம் தைக்க கொடுக்க போகிறோம் என ஏதேதோ சொல்லி மழுப்ப முயற்சி செய்தாலும் ஞானம் நம்புவதாக இல்லை.


குணசேகரன் இடையில் நுழைய "உங்கள மாதிரி பக்கவாதம் வந்த யாரையும் நான் பார்த்ததே இல்லை. இது பக்காவான பக்கவாதமால இருக்கு" என அவரையும் கலாய்த்து விடுகிறாள். பின்னர் ஜனனி வந்து அவர்களை "நான் தான் கூட்டிட்டு போறேன்" என சொன்னேன் என மழுப்பி அழைத்து சென்று விடுகிறாள். 


சக்தி, ஜீவானந்தம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காக ஊருக்கு செல்கிறான். ஐஸ்வர்யாவின் பள்ளிக்கு ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா செல்கிறார்கள். அங்கே குழந்தைகளுக்கு ரேணுகா பரதம் சொல்லி கொடுப்பதை பார்த்து பூரிக்கிறார்கள் ஜனனியும் நந்தினியும். குழந்தைகளும் மிகவும் வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். "என்னால் முடிந்த வரையில் சொல்லிக்கொடுக்கிறேன். பிறகு கடவுள் கையில் தான் உள்ளது என ரேணுகா சொல்கிறாள். பள்ளி ஆசிரியை ரேணுகாவிடம் ஒரு கவரை கொடுத்து இனி நீங்களும் இந்த பள்ளியில் ஒரு ஆசிரியை. இது உங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர். மாதாமாதம் உங்க அக்கவுண்டில் சம்பளம் வந்துவிடும் என சொல்கிறார். அதை கேட்ட மூவருக்கும் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். 



குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கரிகாலன் வந்து எனக்கு ஒரு டவுட் மாமா. நான் படிச்சா ஒரு நியூஸ்ல பெண்களுக்கு பக்கவாதம் வந்த வலது கையும், ஆண்களுக்கு பக்கவாதம் வந்தா இடது கையும் செயல் இழந்து விடும் அப்படினு போட்டு இருந்தது. ஆனா உங்க சொத்து கை எப்படி மாமா விழுந்துச்சு என கேட்கவும் திருதிருவென முழிக்கிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் எதிர் நீச்சல் (Ethir neechal) முடிவுக்கு வந்தது.