Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆகஸ்ட் 23) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.


கிழக்கு வாசல் சீரியல் 


நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது.


இன்றைய எபிசோட் அப்டேட்


பார்வதி நடேசனிடம் சென்று, ரேணுவின் படிப்பு விஷயமாக பேசுகிறார். ஆனால் என்னை நம்பி எந்த கமிட்மெண்டும்  ரேணு விவகாரத்தில் கொடுக்க வேண்டாம் என மனைவியை எச்சரிக்கிறார். இதை நீ போய் சொல்கிறாயா?  என கேட்டு விட்டு, இல்லை நானே போய் முடிவை தெரிவிக்கின்றேன் என கூறிவிட்டு ஹாலுக்கு செல்கிறார். அங்கே சிவகாமி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். 


நடேசன் பேச வருவதை தடுத்து உள்ளே செல்லுமாறு பார்வதி சொல்ல,அந்த நேரம் பார்த்து ரேணு அங்கு வருகிறார். இதனால் பதறிப்போகும் பார்வதி பிரச்சினையை தடுக்க, ரேணுவை உள்ளே போகுமாறு சொல்கிறார். பார்வதி செய்கையை பார்த்து கடுப்பாகும் நடேசன், சிவகாமியிடம் ரேணு படிப்பு அப்பா என்னிடம் காசு எதிர்பார்த்தால் என்ன நியாயம் என கேட்கிறார். ஏற்கனவே மலர் படிப்பு பிரச்சினையில் தான் அப்பாவுக்கும் எனக்கும் 2 வருஷமா பேச்சு இல்லாமல் இருக்கிறது என தெரிவித்து கொண்டிருக்கும் போது சாமியப்பன் வீட்டுக்குள் நுழைகிறார். 


விருந்து சாப்பிட போன இடத்தில், என்னையே விருந்தாக்கி விட்டார்கள் என பார்வதியை தன் தலையில் கட்டி வைத்ததை பற்றி பேசுகிறார். மேலும் ரேணு படிப்புக்காக மெனக்கெட்டாலும் அவருக்கு கொல்லி போட போவது நான் தான் என நடேசன் சொல்ல, அவரை  சிவகாமி  அடிக்கிறார். இதைக்கேட்டு சாமியப்பன் உடைந்து போகிறார். அவரை பார்த்து கண்கலங்கும் ரேணு, தான்  ஒரு டிகிரி படித்தது போதும், வேலைக்கு செல்கிறேன். என்னால் உங்களுக்கு நிறைய பிரச்சினை என அப்பாவுக்கு ஆறுதல் கூறுகிறார். 


ஆனால் ரேணு படிப்பு விஷயத்தில் யாரும் எதுவும் செய்ய வேண்டாம். நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல நடேசனுக்கு ஆத்திரமாக வருகிறது. அவர் எப்படி ரேணுவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம் என கேள்வியெழுப்புகிறார். பின்னர் வெளியே செல்லும் சாமியப்பன் வரும் போது கையில் ஒரு பேப்பரோடு வரும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.