சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் அப்பத்தாவை மிரட்டி உருட்டி கையெழுத்து வாங்கிவிட்டு ரூமுக்குள் அடைந்து வைத்து ரூம் வாசலிலேயே சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். "அப்பத்தாவுக்கு சாப்பாடு கொடுத்து குளிக்க வைத்து டாக்டரிடம் கூட்டி போக வேண்டும்" என நந்தினி சொல்கிறாள்.
"அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னோட புருஷன் வந்து விடுவான். அவனை நீ என் பக்கம் திருப்பிவிட யோசி போ " என்கிறார் குணசேகரன். "என்னோட புருஷனால தான் உங்க கழுத்துக்கு கத்தி வரப்போகுது" என்கிறாள் நந்தினி. அனைவரையும் அங்கு இருந்து விரட்டி விடுகிறார் குணசேகரன்.
குணசேகரனுக்கு கதிர் போன் செய்கிறான். "ஒரு பெரிய தப்பு நடந்து விட்டது. ஜீவானந்தத்தை ஜன்னல் வழியா இந்த கிள்ளிவளவன சுட சொன்னா அவனோட பொண்டாட்டிய சுட்டுட்டான்" என்கிறான் கதிர். "என்னது அவனுக்கு குடும்பம் இருக்கா?" என்கிறார் குணசேகரன். "குடும்பத்தை இந்த உலகமே தெரியாமல் மறைத்து வைத்துள்ளான். ஜீவானந்தம் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. என்னை இழுத்து வந்துட்டானுங்க" என்கிறான் கதிர்.
"சரி அதுவும் ஒரு வகையில் நல்லது தான். யாரும் உன்னை பார்க்கவில்லை தானே" என கேட்கிறார் குணசேகரன். " யாரும் இல்லை ஆனா அந்த ஜனனி வந்து உள்ள பூந்து எல்லாத்தையும் சொதப்பிட்டா. அவ என்னை பார்க்கலை" என்கிறான் கதிர். "அவ ஏன் அங்க வந்தா? இங்க வந்து யார்கிட்டேயும் எதையும் சொல்லாதே. ஆடிட்டர், வக்கீலை வைத்து அப்பத்தாகிட்ட இருந்து கையெழுத்து வாங்கிட்டேன். பாதுகாப்பா வீட்டுக்கு வா" என்கிறார் குணசேகரன்.
ஜனனி காரில் வரும் வழியெல்லாம் ஜீவானந்தம் பற்றி அனைவரும் சொன்னதை நினைத்து பார்த்து கலங்குகிறாள். கயல்விழி சுட்டு கொல்லப்பட்டதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாள்.
வக்கீல் போன் செய்து ஜீவானந்தம் மீது கேஸ் போட்டதை பற்றி குணசேகரனிடம் சொல்கிறார். "ஆனா அப்பத்தா இங்க வந்து ஜீவானந்தம் நல்லவன் என அவனுக்கு சப்போர்ட்டா பேசினா அவ்வளவு தான்" என்கிறார் வக்கீல். "எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்" என்கிறாயே குணசேகரன்.
ஆவேசப்படும் நந்தினி:
கதிர் வீடு திரும்புகிறான். கதிரிடம் "எங்க போயிட்டு வர்றீங்க. முழுசா வருவீங்களா இல்லையா என தெரியாம இரண்டு நாளா பயந்துகிட்டு இருந்தேன். உங்க அண்ணன் கையை ஒங்கிட்ட வராரு. உங்கள வேட்டை நாய்னு சொன்னாரு. அவருக்கு உங்க மேல பாசம் எல்லாம் கிடையாது. அவர் என்ன எவ்வளவு அசிங்கமா பேசுனாரு. நீங்க இருக்கும் போதே அவர் அப்படி பேசுனாருன்னா அப்போ உங்களுக்கு என்ன மரியாதை. நான் நினைச்சு இருந்தா அப்பவே போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பேன். நீங்க வந்து எனக்காக பேசுவீங்கன்னு தான் காத்துக்கிட்டு இருந்தேன்.
உங்களோட கொஞ்ச வருஷம் வாழ்ந்து இருக்கேன். ஒரு ஓரத்திலாவது உறுத்தல் இல்லையா. எல்லாத்தையும் விட்டு விடலாம். நீங்க பொணமா தான் வீட்டுக்கு வருவீங்கன்னு சொன்னாரு. எனக்கு எப்படி இருந்து இருக்கும். உங்களுக்கு வலிக்குமா என தெரியல ஆனா எனக்கு வலிச்சுது. பொணமா வருவீங்கன்னு சொல்லற அளவுக்கு எங்க போனீங்கன்னு சொல்லுங்க" என கதிர் சட்டையை பிடித்து நந்தினி கேட்கிறாள்.
குணசேகரனிடம் மோதும் கதிர்:
கதிர் முறைத்து கொண்டே குணசேகரனிடம் சென்று "என்ன அண்ணன் என்ன சொன்னீங்க அவள கேக்குறேன்ல. அடிக்க போனீங்களா" என்ன கதிர் மிகவும் கோபமாக கேட்கிறான். அவன் அப்படி பேசினது அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.