Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.


கிழக்கு வாசல் சீரியல் 


நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணி ஒளிபரப்பாகிறது. 


நேற்றைய எபிசோடில், திருமண பேச்சு தடைப்பட்டதால் மன வருத்தத்தில் இருக்கும் ரேணுவை சாமியப்பன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மேற்கொண்டு படிக்க சொல்லி வலியுறுத்துகின்றனர். இதற்கு மூத்த அண்ணன் நடேசன் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சிகளும், அர்ஜூன் ரேணுவை கோயிலில் சந்தித்து சமாதானம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 


இன்றைய எபிசோட் அப்டேட்


நடேசனிடம் மாயா, ரேணு படிக்கப் போவதை பற்றி குறை சொல்கிறாள். அவளுக்கு தான் வளர்ப்பு மகள் என தெரிய வேண்டாமா?.. வேலை பார்த்துக்கிட்டே படிச்சா தான் என்ன?, இந்த கிழக்கு வாசல் வீட்டுல அவளுக்கும் பங்கு இருக்குன்னு சொல்றது என்ன நியாயம் என தனது ஆதங்கத்தை எல்லாம் மாயா கொட்டுகிறார். அதற்கு நடேசன் ஆதரவாக பேச, இதையெல்லாம் பார்வதி தூரத்தில் இன்று கேட்டு, அவர்கள் அருகில் வருகிறாள். பார்வதியை கண்டதும் இருவரும் பேச்சை நிறுத்துகின்றனர். 


ஆனால் டீச்சரான மாயாவும், பேங்கில் வேலை பார்க்கும் படித்தவரான நடேசனும் ஒரு பெண் படிப்பதை இப்படியா விமர்சிப்பீர்கள் என காட்டமாக கேட்டு விட்டு செல்கிறார். அதேசமயம் ரேணு பற்றி மாயா குறை சொல்வதை கேட்டு அவரது கணவர் மாணிக்கம் டென்ஷனாகிறான். இதனையடுத்து ஷண்முகம், ரேணுவுடனான காதல் குறித்து தன் நண்பனிடம் பேசுகிறார். அதேசமயம் அர்ஜூன் ரேணுவை சமாதானம் செய்ய முற்படுகிறான். ஆனால் அவரை திட்டிவிட்டு தனக்கு பேச பிடிக்கவில்லை என உறுதியாக ரேணு தெரிவிக்கிறார். 


இதனைத் தொடர்ந்து, மாணிக்கம் மாயாவிடம் ரேணு பற்றி குறை சொல்வதை நிறுத்துமாறு சொல்கிறான். ஆனால் அவர் எப்படி இந்த கிழக்கு வாசல் வீட்டில் உரிமை கேட்கலாம் என்ற வாதத்தை முன்வைக்க இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் மாயாவை மாணிக்கம் அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு வரும் பார்வதி, மாயாவை சமாதானம் செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.