சின்னத்திரை ரசிகர்களை குறிப்பாக இல்லத்தரசிகளை தினந்தோறும் ஆக்டிவாக வைத்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சீரியல்கள் தான் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சன் டிவிக்கு மிக நெருக்கமாக டஃப் கொடுக்கும் தொலைக்காட்சி என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி விஜய் டிவி தான்.
ஈரமான ரோஜாவே :
விஜய் டிவியில் ஏராளமான சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. அப்படி நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலின் முதல் சீசன் 2018ம் ஆண்டு துவங்கி 2021ம் ஆண்டு நிறைவடைந்தது. திரவியம், பவித்ரா, ஷியாம் சாய், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஈரமான ரோஜாவே 2 :
முதல் சீசன் முடிவடைந்ததும் உடனே ஈரமான ரோஜாவே 2 துவங்கியது. திரவியம், கேப்ரியல்லா, சித்தார்த், ஸ்வாதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடர் துவங்கிய நாள் முதல் இன்று வரை சிறப்பாக இருந்து வருகிறது. தாய் செல்வம் இயக்கி வந்த இந்த தொடரை அவரின் மறைவுக்கு பின்னர் ராஜா சுந்தரம் இயக்கி வருகிறார்.
கதைக்களம் :
திரவியம் - கேப்ரியல்லா இருவரும் காதலித்து வரும் நிலையில் அவர்களின் சகோதரர் மற்றும் சகோதரி சித்தார்த் - ஸ்வாதி இருவருக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற திருமணத்திற்கு முதல் நாள் இரவு மணப்பெண் கடத்தி செயல்படுகிறாள். மணப்பெண்ணை காணவில்லை என அனைவரும் தேட மணப்பெண்ணுக்கு பதிலாக அவளின் தங்கையான கேப்ரியல்லாவுக்கும் சித்தார்த்துக்கும் திருமணம் நடைபெறுகிறது.
திரவியம் கடத்தி செல்லப்பட்ட ஸ்வாதியை காப்பாற்றி மண்டபத்திற்கு அழைத்து வருவதற்குள் கேப்ரியல்லா - சித்தார்த் திருமணம் முடிந்துவிட்டதால் திரவியம் - ஸ்வாதிக்கு பெரியவர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் திரவியம் - கேப்ரியல்லா காதல் அனைவருக்கும் தெரியவர இரண்டு ஜோடிகளும் பிரிகிறார்கள். ஏராளமான பிரச்சினைகளுக்கு பிறகு இவர்கள் ஒன்று சேர்வது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
கிளைமாக்ஸ் காட்சி :
அவர்களின் கடைசி தம்பி தங்கை திருமணமும் பெரிய போராட்டத்திற்கு பிறகு நடைபெறுகிறது. அதே வேளையில் மூன்று ஜோடிகளும் ஒன்று சேர்கிறார்கள். அத்துடன் இந்த ஈரமான ரோஜாவே 2 சீரியல் முடிவடைய உள்ளது. இந்த சீரியலின் கடைசி நாள் கிளைமாக்ஸ் காட்சிகள் ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த குடும்பத்தில் போட்டோவை சோஷியல் மீடியாவில் சீரியல் குழு வெளியிட்டு முடிவை உறுதி செய்துள்ளது. இந்த புகைப்படம் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும் தங்களின் அபிமான சீரியல் முடிவுக்கு வருவது மனவேதனையை கொடுத்துள்ளது.