சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் அப்பத்தா மரணத்தின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்பதை நிச்சயமாக நாங்கள் கண்டுபிடித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுப்போம் என முழு மூச்சாக முயற்சி செய்கிறார்கள் ஜனனி மற்றும் சக்தி. ஜீவானந்தம் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என நிரூபிப்பதற்காக சாரு பாலாவின் உதவியை நாடுகிறார்கள்.
ஈஸ்வரி வேலைக்கு செல்வதை தடுக்க முயற்சி செய்த குணசேகரனை எதிர்த்து ஈஸ்வரி காலேஜ் செல்ல அங்கேயும் சென்று அவளை மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்த தன்னுடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக வேலையே தேவை இல்லை என உதறிவிட்டு வருகிறாள் ஈஸ்வரி. இதுதான் கடந்த வாரம் வரை எதிர்நீச்சலில் ஒளிபரப்பான கதைக்களம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஈஸ்வரியை காலேஜுக்கு சென்று அசிங்கப்படுத்தியதால் கொந்தளித்த ஜனனி வீட்டுக்கு வந்ததும் குணசேகரன் முன்னால் போய் நின்று "மிஸ்டர். குணசேகரன், நீங்க செஞ்ச காரியத்தால இந்த வீட்டுக்குள்ளேயே முடங்கி போயிடுவோம் என மட்டும் நினைக்காதீங்க. இனிமே தான் வேகமா செயல்படுவோம்" நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக பேசுகிறாள் ஜனனி. அவளை அப்படியே எரித்து விடுவது போல பார்க்கிறார் குணசேகரன்.
அந்த நேரத்தில் குணசேகரனை பார்க்க யூனியன் ஆட்கள் வருகிறார்கள். எலெக்ஷன் குறித்து பேசுகையில் "எஸ்.கே.ஆர் அவரோட பொண்டாட்டியை கேண்டிடேட்டாக நிற்க வைக்க போகிறாராம்" என ஒருவர் சொல்ல "யாரு சாருவா?" என குணசேகரன் கேட்க "ஆமா அண்ணன்" என்கிறார்கள் அவர்கள். இந்த விஷயம் குணசேகரனுக்கும் அவரது தம்பிகளுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது.
சாருபாலாவுக்கு எதிராக நீங்கள் எலெக்ஷனில் யாரை நிற்க வைக்க போகிறீர்கள்? என கேட்க வீடு வாசலுக்கு சென்ற குணசேகரன் அங்கு நின்று கொண்டு இருந்த ஈஸ்வரியை பார்த்து "எலெக்ஷனில் நிற்க ஒரு கேண்டிடேட் கேட்டிங்களே" என சொல்லி ஈஸ்வரியை காட்டுகிறார். பெண்கள் அனைவருக்கும் அதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
சாருபாலாவுக்கு எதிராக ஈஸ்வரியை எலெக்ஷனில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ள குணசேகரனின் இந்த முடிவுக்கு ஈஸ்வரியின் பதில் என்னவாக இருக்கும். அவள் முடியாது என்றாலும் வலுக்கட்டாயமாக மிரட்டி ஈஸ்வரியை நிற்க வைக்க தான் போகிறார் குணசேகரன். கதையை ஏதேதோ பக்கம் திருப்பி சீரியலை ஒட்டி வருகிறார்கள்.
நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் களை இழந்துவிட்டதோடு சீரியலின் கதைக்களமும் ஜவ்வு போல இழுக்கிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்நீச்சல் சீரியலுக்கு இருந்த எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.