பள்ளியில் படிக்கும்போது தனக்கு வந்த காதல் அழைப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கூறியுள்ளார். 


விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் “சின்ன மருமகள்”. இதில் நவீன் குமார், ஸ்வேதா,ஏஒய்கே சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மைனர் பெண்ணான தமிழ் செல்விக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்த நிலையில் அவர் செய்த சம்பவத்தால் திருமணம் நின்று போகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் செல்வியின் படிக்கும் கனவு பலித்ததா? இல்லை இல்வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டாரா? என்ற ரீதியில் இந்த சீரியல் கதை  அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த சீரியலில் தமிழ் செல்வியாக நடிக்கும் ஸ்வேதா தன்னுடைய காதல் கதைகளை பற்றி கூறியுள்ளார். அதனைப் பற்றி காணலாம். 


சீரியல் குறித்த வரவேற்பு


”சின்ன மருமகள் தான் என்னோட முதல் சீரியல். இதில் கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கும்போது சந்தோசமாக உள்ளது. என்னோட வயசு 21 ஆரம்பித்துள்ளது. நான் உயரம் குறைவாக இருக்கும்போது குட்டி குழந்தையாகவே என்னை பார்க்கிறார்கள். சீரியலை பார்த்து விட்டு என்னோட நண்பர்கள் சந்தோசமா இருப்பதாக சொன்னார்கள். 2 வருடத்துக்கு முன்னாடி நான் தமிழும் சரஸ்வதி சீரியலில் சின்னதாக ஒரு கேரக்டர் செய்திருந்தேன். அதில் ஹீரோயினாக நடிக்கும் நக்‌ஷத்திராவே என்னோட சின்ன மருமகள் சீரியலை விளம்பரப்படுத்த பேசியது சந்தோசமாக இருந்தது. 


விடாமல் முயற்சி செய்தால் இன்னும் நிறைய பண்ணலாம் என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். நடிக்க வந்தது கூட எந்த திட்டமும் இல்லை. சின்ன மருமகள் சீரியலில் ஹீரோ நவீனுக்கும், எனக்கும் இன்னும் பெரிதாக காட்சிகள் வரவில்லை. இனிமேல் தான் நிறைய இருக்கும். 


பள்ளி காதல்கள் 


தொடர்ந்து தனக்கு வந்த லவ் ப்ரோபோஸல்ஸ் பற்றி கூறினார். அதாவது, “நான் பள்ளியில் படிக்கும்போது காமெடியான லவ் ப்ரோபோசல்கள் எல்லாம் வந்தது. 2 வருசத்துக்கு முன்னாடி என்னுடன் வகுப்பில் படித்த ஜெயராஜ் என்ற பையனுக்கு என்னை பிடித்துள்ளது. இன்னொரு பையன் எனக்கு பேனா உள்ளிட்டவற்றை கொடுத்ததைப் பார்த்து இவருக்கு பொறாமையாக இருந்துள்ளது. ஒருநாள் என்னிடம் நம்ம கல்யாணத்துக்காக சீட்டு எல்லாம் போட்டு வைத்திருக்கேன். நீ என்னடா என்றால் அந்த பையனிடம் பேசிக் கொண்டிருக்கிறாயே? என கேட்டான். எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இது எதிர்க்கால பிளான் போடுற அளவுக்கு நம்ம மேல பைத்தியமாக இருக்கிறானே என எனக்கு தோன்றும் அளவுக்கு அந்த சம்பவம் இருந்தது. 


இன்னொரு சம்பவம், பள்ளி பிரின்சிபால் ரூமுக்கு அருகில் மாடிக்கு செல்லும் படிக்கட்டு இருக்கும். அங்கிருந்த சுவற்றில் என்னுடைய பெயரையும், அவனுடைய பெயரையும் எழுதி ‘நீ எனக்கு தான்’ என எழுதி வைத்தி ஹாட்டின் வேறு வரைந்து வைத்திருந்தான். எல்லாரும் அந்த சுவற்றைப் பார்த்துவிட்டு என்னை பார்க்கிறார்கள். எனக்கு ஒன்னுமே புரியவில்லை. நான் போய் பார்த்தால் அங்கு அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தது. அதை அழிக்க முயற்சி பண்ணும் போது முடியவில்லை. நான் முதல்வரிடம் போய் சொல்லி அந்த பையனை 2 நாட்கள் சஸ்பெண்ட் பண்ணாங்க. 


இதேபோல் இன்னொரு பையன், கையெல்லாம் அறுத்துக் கொண்டு வாட்ஸ்அப்ல போட்டோ அனுப்பி விட்டான். என்னோட பக்கம் எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதால் அம்மா, பள்ளியில் முதல்வரிடம் நடந்ததை சொல்லி விடுவேன்" என அந்த நேர்காணலில் நடிகை ஸ்வேதா தெரிவித்துள்ளார்.