சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரின் நேற்றைய (அக்டோபர் 18) எபிசோடில் ஜான்சி ராணியை மரியாதை இல்லாமல் பேசியதற்காக பேரப்பிள்ளைகளை கண்டிக்கிறார் விசாலாட்சி அம்மா. ஜான்சி ராணி ஈஸ்வரி பற்றி அசிங்கமாக பேச கொந்தளித்த தர்ஷன் அவளை அடிக்க எகிறி கொண்டு செல்கிறான். வரம்பு மீறி பேசும் ஜான்சியை அனைவரும் கண்டிக்கிறார்கள்.
ஜனனியும் சக்தியும் மிகுந்த மனவருத்தத்துடன் வீட்டுக்கு வருகிறார்கள். கிருஷ்ணன் பின்னணி குறித்து தெரிந்து கொண்டு பின்னர் அவனை எதிர்க்கலாம் என்பது ஜனனியின் யோசனை. வீட்டில் உள்ளவர்களுக்கு பேக்டரி பிரச்சினையை பற்றி தெரிய வேண்டாம் என சக்தியிடம் சொல்லிவிடுகிறாள் ஜனனி. என்ன நடந்தது என்பது தெரியாமல் அனைவரும் ஜனனியை பாராட்டி அவளின் பேக்டரி திறப்பு விழாவுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
ஜான்சி ராணி வீட்டில் நடந்த கூத்து அனைத்தையும் கதிர் மற்றும் ஞானத்திடம் போட்டு கொடுக்கிறாள். எதையுமே காதில் வாங்காமல் ஏதோ யோசனையிலேயே இருக்கிறான் கதிர். கரிகாலன் அவர்கள் இருவரையும் வெளியில் அழைத்து சென்று பிளான் பற்றி பேசலாம் என சொல்ல, மூவரும் வாசலுக்கு செல்கிறார்கள்.
கதிர் எல்லா பக்கமும் யாராவது இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொண்டு பேச துவங்குகிறான். ஜான்சி ராணியோ அவர்கள் என்ன பிளான் செய்கிறார்கள் என்பதை ஒட்டு கேட்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட் வெளியாகியுள்ளது.
கதிர் அவனுடைய பிளான் என்ன என்பதை ஞானத்திடமும் கரிகாலனிடமும் சொல்கிறான். "அண்ணன் அங்க வந்து இறங்கியதும் நாம கொடுக்க போற முதல் பரிசு ஜீவானந்தத்தோட உசிரு தான்" என்கிறான் கதிர். அதை கேட்டு ஜான்சி மனதுக்குள் வேறு ஏதோ ஒரு கணக்கு போடுகிறாள்.
மாடியில் அப்பத்தா வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு மீட்டிங் போட்டு அவர் நடந்த போகும் பங்க்ஷன் பற்றி பேசுகிறார். "அந்த பங்க்ஷன்ல வைச்சு 40% பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்ல போறேன்" என்கிறார் அப்பத்தா. அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைய "அதை இப்போவே சொல்ல வேண்டியது தானே" என்கிறார் விசாலாட்சி அம்மா. சிரித்துக்கொண்டே முடியாது என தலையை ஆடுகிறார் அப்பத்தா.
"நாங்க எல்லாருமே விழாவுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடியே கிளம்பிடுவோம்" என அப்பத்தா சொல்ல பைத்தியக்கார கரிகாலன் "நீங்களுமா?" என உளற கதிர் ஞானம் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
அப்பத்தா நடத்த போகும் பன்க்ஷனை வைத்து பெரிய ட்விஸ்ட் ஒன்றை கொடுக்க இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அது என்னவாக இருக்கும்? ஜீவானந்தம் குணசேகரன் சந்திப்பு நிகழுமா? யாரின் உயிருக்கு ஆபத்து? இவை அனைத்திற்கும் கூடிய விரைவில் பதில் கிடைக்கும்.
என்ன தான் சஸ்பென்சாக கதையை நகர்த்தினாலும் நடிகர் மாரிமுத்துவின் இழப்புக்கு பிறகு சீரியலில் ஸ்வாரஸ்யம் சற்று குறைவாகவே உள்ளது என்பது தான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.