விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 14) எபிசோடில் கணேஷ் சொன்ன இடத்திற்கு வந்து அவனுடைய அப்பாவும் அம்மாவும் பார்க்கிறார்கள். கணேஷை எவ்வளவோ சமாதானம் செய்கிறார்கள். ஆனால் கணேஷ் மனது மாறுவதாக இல்லை.
"அமிர்தாவும் நானும் எங்கள் வாழ்க்கையைப் பற்றி நிறைய கனவு கண்டு பேசி இருக்கிறோம், எங்களுக்கு அழகான ஒரு குழந்தை இருக்கிறது. நான் எவனுக்காகவும் அமிர்தாவை விட்டுக்கொடுக்க முடியாது. அவள் எனக்கு வேண்டும் அவளோடு தான் வாழ்வேன். அவளையும் நிலாவையும் அழைத்துக்கொண்டு நான் ஊருக்கு வருவேன்" என ஆவேசமாக பேசுகிறான்.
கணேஷ் அம்மாவும் அப்பாவும் "வாழ வேண்டிய வயசுல அவளோட வாழ்க்கையை தொலைச்சுட்டாளே என நாங்க தான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சோம். இப்போ அவ உன்னுடைய அமிர்தா இல்லை. நீ அவளுடன் வாழ நினைப்பது சரியும் இல்லை" என சொல்கிறார்கள். ஆனால் அவர்களைத் தூக்கியெறிந்து பேசிய கணேஷ் “எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்” என சொல்லிவிட்டு சென்று விடுகிறான்.
வீட்டில் பாக்கியா, செழியன், ஜெனி மாற்றும் அமிர்தா உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டுக்கு வந்த மாலினியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தாலும் சாதாரணமாக இருக்க முயற்சிக்கிறார்கள். பாக்கியாவுக்கு செழியன் நடவடிக்கை பார்த்து மாலினி மீது சந்தேகம் வருகிறது.
மாலினி ஏதோ அர்ஜென்ட் ப்ராஜெக்ட் விஷயமாக வந்து இருப்பதாக சொல்கிறாள். பாட்டியின் ரூமில் உட்கார்ந்து வேலையை பார்க்கச் சொல்கிறாள் பாக்கியா. ரூமுக்கு சென்றதும் செழியனின் கையை பிடித்துக் கொண்டு “எனக்கு எப்போ எல்லாம் தோணுதோ, அப்போ எல்லாம் நான் வருவேன்” என அவனை பிளாக்மெயில் செய்கிறாள் மாலினி.
“பாக்கியாவுக்கு கணேஷின் அம்மா, அப்பா போன் செய்து பேசுகிறார்கள். நாங்கள் உங்களை சந்திக்க சென்னைக்கு வந்து இருக்கிறோம். உங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் பற்றி பேசவேண்டும்” என சொல்லி பாக்கியாவை அவர்கள் இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறார்கள்.
அவர்களை சந்திக்க வந்த பாக்கியா "ஏதாவது பிரச்சினையா? அமிர்தா ஏதாவது சண்டை போட்டுவிட்டாளா?" என பதட்டத்துடன் கேட்கிறாள். அப்போது அவளிடம் தயங்கி தயங்கி பேசுகிறார்கள் கணேஷின் அப்பா அம்மா. "அமிர்தா வாழ்க்கை நல்லபடி இருக்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அவளை எழிலுக்கு கல்யாணம் செய்து வைத்தோம். ஆனால் இப்படி ஒரு பிரச்சினை வரும் என நாங்கள் நினைக்கவே இல்லை" என அவர்கள் சொல்லவும் எதுவும் புரியாமலே பதட்டமாகிறாள் பாக்கியா.
செத்துப்போனதாக நினைத்த எங்களுடைய மகன் கணேஷ் உயிரோடு வந்து நிற்கிறான் என உண்மையை சொன்னதும் பாக்கியா அப்படியே அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போய் நிற்கிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.