சன் டிவியில் அக்டோபர் 13ஆம் தேதியான நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் வீட்டில் இருந்து வெளியில் வருவதைப் பார்த்த கதிரும்  ஞானமும் வீட்டுக்கு வந்து சக்தியிடம் எதற்காக அந்த ஆளு வந்துட்டு போறான் எனக் கேட்க, சரியான பதிலடியை கொடுக்கிறான் சக்தி. கரிகாலன் வாய் சும்மா இல்லாமல் சக்தியை நோண்ட, அடி வாங்கிக் கொள்கிறான். தொடர்ந்து சண்டை ஏற்பட விசாலாட்சி அம்மா வந்து தடுத்து விடுகிறார். 


 



சமையலறை பொறுப்பு மொத்தத்தையும் விசாலாட்சி அம்மா ஜான்சிராணியிடம் கொடுக்க, அவள் சமைத்ததை மருமகள்கள் சாப்பிட மறுக்கிறார்கள். அப்பத்தா வீட்டுக்கு வந்து மருமகள்களிடம் பேசுகிறார். "தெளிவா நீங்க எல்லாரும் எல்லாத்தையும் இத்தோட முடிச்சுக்குங்க என சொல்லிட்டு போறதுக்காக வந்தேன்" என அவர்களிடம் சொல்கிறார் அப்பத்தா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்ததது. 


 



அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


அப்பத்தா மருமகள்கள் மற்றும் சக்தியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது "ஒரு பங்ஷனுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். நீங்க எல்லாரும் வந்து கலந்துக்கணும். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கப்போவது யாருன்னு தெரியுமா? ஜனனி" என சொன்னதும் ஜனனி உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அப்பத்தா பேசிக்கொண்டே இருக்கும்போது விசாலாட்சி அம்மா கதிர் மற்றும் ஞானம் மூவரும் மாடிக்கு வருகிறார்கள். 


அன்று இரவு கதிரும் ஞானமும் வெளியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கதிர் ஞானத்திடம் "ஜீவானந்தம் தானா வந்து வலையில சிக்கி இருக்கான். அவனை முடிச்சுவிட்டுற போறேன்" என கொலைவெறியுடன் பேசுகிறான். ஞானம் முகம் அதைக் கேட்டு வாடிப் போகிறது. இவர்கள் பேசுவதை ஈஸ்வரி மாடியில் இருந்து கேட்டு விடுகிறாள். 



 
அடுத்த நாள் ஜீவானந்தத்தைத் தேடி ஈஸ்வரி அவருடைய வீட்டுக்கு செல்கிறாள். வெண்பா ஈஸ்வரியை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாகி விடுகிறாள். ஜீவானந்தத்திடம் ஈஸ்வரி அம்மா வந்து இருப்பதாக சொல்கிறாள் வெண்பா. "என்ன திடீர்னு வந்து இருக்கீங்க?" என ஜீவானந்தம் கேட்க, "இல்ல பேசணும் என தோணுச்சு" என்கிறாள் ஈஸ்வரி. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 


 




அப்பத்தா என்ன பங்க்ஷன் நடத்தப் போகிறார்.. அதில் ஜீவானந்தமும் கலந்து கொள்ள போகிறாரா? அங்கு வைத்து தான் கதிர் ஜீவானந்தத்தை போட்டுத் தள்ள பிளான் செய்துள்ளானா? ஈஸ்வரி இது குறித்து அவருக்கு தெரிவிப்பாளா? இந்த கேள்விகளுக்கான பதில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் கிடைக்கும்!