விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi )தொடரின் இன்றைய எபிசோடில் அமிர்தாவைத் தேடி கணேஷ் பாக்கியாவின் வீட்டைக் கண்டுபிடித்து வாசல் வரை வந்து விடுகிறான். அந்த நேரம் பார்த்து தான் அமிர்தா நிலா பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு மாடிக்கு அழைத்து செல்கிறாள்.
வாசலில் வந்து நின்ற கணேஷ் உள்ளே நுழையப் போகும்போது ஹாலில் அமிர்தா மற்றும் நிலா எழிலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.
அப்படியே அங்கேயே உறைந்து போய் நிற்கிறான் கணேஷ். வெளியில் சென்ற பாக்கியா வீட்டுக்கு வர, வாசலில் கணேஷ் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து "யாருப் பா நீ? எழிலோட ப்ரெண்டா? எழிலை கூப்பிடவா?" எனக் கேட்டதும் அலறி அடித்துக்கொண்டு "வேணாம் யாரையும் கூப்பிடாதீங்க..." என சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு ஓடிவிடுகிறான்.
பீச்சுக்கு புலம்பிக் கொண்டே வந்த கணேஷ் எழிலுடன் அமிர்தாவும் நிலவும் இருக்கும் புகைப்படத்தை நினைத்து நினைத்து கண் கலங்குகிறான். தன்னுடைய அப்பா அம்மாவுக்கு போன் செய்து "நான் அமிர்தாவை பார்த்துவிட்டேன். அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். நீங்க தான் அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. ஆனா இதை எல்லாம் என்கிட்டே இருந்து மறச்சுட்டீங்க" என்கிறான்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேஷின் அப்பா - அம்மா "நீ ஏன் அங்க எல்லாம் போன? அமிர்தாவை டிஸ்டர்ப் பண்ணாத. அவ வீட்டுக்கு எல்லாம் போகாத. கிளம்பி வா" என சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்காத கணேஷ் "நான் வந்தா அமிர்தாவோட தான் வருவேன்" என சொல்லி போனை வைத்து விடுகிறான். பதட்டமான கணேஷின் அம்மாவும் அப்பாவும் சென்னை கிளம்பி வர முடிவெடுக்கிறார்கள்.
செழியன் மாலினியை இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதே எனக் கூறியதால் அப்செட்டான மாலினி, வீட்டுக்கு வந்து கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்து வெறி பிடித்தது போல நடந்து கொள்கிறாள். பிறகு மாலினியும் செழியனும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை செழியனுக்கு அனுப்பிவைத்து வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறாள்.
"நீ மட்டும் இப்போ உடனே என்னோட வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் இந்த போட்டோவை எடுத்துக் கொண்டு உன்னுடைய வீட்டுக்கு வருவேன்" என செழியனை மிரட்டுகிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சியான செழியன், என்ன செய்வதென புரியாமல் ஜெனி தூங்கிய பிறகு மாலினி வீட்டுக்குச் செல்ல கிளம்புகிறான்.
அதை பாக்கியா பார்த்து விடுகிறாள். அவளிடம் “ஆஃபிஸ் வேலை இருக்கு போயிட்டு வந்து விடுகிறேன்” என சமாளிக்கிறான். ஆனால் அதை நம்பாத பாக்கியா "நீ ஆபிஸுக்கு போகவில்லை என்பது எனக்கு தெரியும். நீ எங்கேயும் போக கூடாது. மரியாதையா மேல போ. இல்லாட்டி எல்லாரையும் கூட்டிட்டு சொல்லவா" என செழியனை மிரட்டுகிறாள் பாக்கியா. என்ன செய்வதென்று புரியாமல் செழியனும் மேலே ரூமுக்குச் சென்று விடுகிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.