Ethirneechal: மீண்டும் காணாமல் போன குணசேகரன்.. நேற்றைய எதிர்நீச்சல் சீரியலில் ஹைலைட்ஸ் இதோ..!

சன் டிவியில் வெற்றிகரமாக வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். 

Continues below advertisement

சன் டிவியில் வெற்றிகரமாக வாரத்தின் 7 நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். 

Continues below advertisement

போலீஸை அடித்த காரணத்துக்காக குணசேகரனை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். அவரை காப்பாற்ற ஞானம், கதிர் இருவரும் செல்கிறார்கள். இப்படியான நிலையில் விசாலாட்சி ஈஸ்வரியையும், சக பெண்களையும் திட்டு தீர்க்கிறார். ‘அவன் என்ன கதிர் மாதிரி சமாளிச்சிரலாம்ன்னு நினைச்சிங்களா? மூத்தவன் பார்வையிலேயே எரிச்சிருவான்’ என பெருமை பேசுகிறார். இதைக்கேட்டு பெண்கள் எப்படி முன்னேறி இருக்காங்க என ஜனனி பேசுகிறார். 

தொடர்ந்து விசாலாட்சி - ஈஸ்வரி இடையே குணசேகரன் பற்றி வாக்குவாதம் ஏற்படுகிறது. அவன் காணாமல் போனது நினைச்சி வருத்தப்படவே இல்லை என விசாலாட்சி தெரிவிக்க, ஈஸ்வரி உடைந்து பேசுகிறாள். ஆத்திரத்தில் உங்க புள்ள பேசுறது தான் மிகவும் முட்டாள் தனமா இருக்கு என தெரிவிக்க, டென்ஷனாகும் விசாலாட்சி, அப்ப அந்த ஜீவானந்தம் தான் அறிவாளியா? என பதில் கேள்வி கேட்க அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். 

உடனே தர்ஷினி சண்டைக்கு செல்கிறார். கூடவே தர்ஷனும் அப்பத்தாவை கடுமையாக எச்சரிக்கிறார். நீங்க தான் உங்க வயசுக்கு கூத்தடிக்கிறீங்கன்னா உங்க அம்மாவும் அப்படி பண்றாளே என விசாலாட்சி தெரிவிக்க, பதிலுக்கு தர்ஷினி எதிர்ப்பு தெரிவிக்க, அவளை அடிக்க அப்பத்தா செல்கிறார். அவரது கையை பிடித்து தர்ஷன் தடுக்க, விசாலாட்சி மிரண்டு போகிறார். 

இதற்கிடையில் குணசேகரனை தேடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கதிர், ஞானம், கரிகாலன் ஆகியோர் செல்கின்றனர். அவர்களுக்கு முன்னால் அங்கிருக்கும் ஆடிட்டர் மற்றும் வக்கீல் இருவரும் ஸ்டேஷனில் குணசேகரன் இல்லை என தெரிவிக்கின்றனர். அவரை ரிமாண்ட் செய்ய நீதிபதி வீட்டுக்கு அழைத்து சென்றிருப்பதாக வக்கீல் தெரிவிக்க, கோபத்தில் கதிர் ஒருவரையும் உயிரோட விடமாட்டேன் என கொந்தளிக்கிறார். இதைப் பார்க்கும் ஆடிட்டர், உங்க அண்ணன் போலீஸை அடிச்சதை யாரோ வீடியோ எடுத்துருக்காங்க. ஆதாரம் இருக்கதால அவர் ஜெயிலுக்கு போறது உறுதி என சொல்கிறார். ஆனால் அண்ணனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அனைவரும், நீதிபதி வீட்டுக்கு செல்கின்றனர். 

தொடர்ந்து உள்ளே கிச்சன் ஏரியாவில் அனைவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். தர்ஷன், தர்ஷினி இருவரும் தாங்கள் ஏன் ஜீவானந்தம் மாதிரி அப்பா வேண்டும் என்ற சொன்னோம்  என அனைவர் முன்னிலையிலும் விளக்கம் அளிக்க, அது பற்றிய பேச்சு போய் கொண்டிருக்கிறது.அப்போது ஜனனி தனது அப்பா பேசாதது குறித்து கூறுகிறார். அந்நேரம் பார்க்க அவளது அப்பா குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பின் அப்பாவை பார்த்து சந்தோஷப்படும் ஜனனி உட்பட வீட்டில் அனைவரும் பேசியும், உங்களிடம் பேச விருப்பமில்லை என ஜனனி அப்பா சொல்லி விடுகிறார். 

தனது வீட்டில் ஒரு விஷேசம் இருப்பதால், சம்பந்தியை அழைத்து பத்திரிக்கை கொடுக்க வந்ததாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே விசாலாட்சி ரூமுக்குள் இருந்து வருகை தரும் காட்சிகளோடு நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது. 


மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil Promo: “வரம்பு மீறும் பிக்பாஸ் நிகழ்ச்சி” ... தரக்குறைவாக மோதிக் கொண்ட பிரதீப் - நிக்ஸன்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola