விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடர் மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. எழில் மற்றும் அமிர்தாவுக்கு கணேஷ் விஷயம் தெரிய வருகிறது. வீட்டில் உள்ள அனைவருக்கும் பாக்கியா கணேஷ் பற்றின உண்மையை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஏற்கனவே செழியன் பிரச்சினையால் வீட்டில் உள்ள அனைவரும் மன நிம்மதி இல்லாமல் இருக்க இப்போது கணேஷ் பிரச்சினையால் எழில் வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதை நினைத்து வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

எழில் எங்கு இருக்கிறான் என அவனுக்கு போன் செய்து உடனே வீட்டுக்கு வரச்சொல்லி பாக்கியாவை போன் செய்ய சொல்கிறார் ஈஸ்வரி. அந்த நேரத்தில் அமிர்தாவின் அம்மா பதட்டத்துடன் வந்து நிற்கிறார். "என்னுடைய பொண்ணு எந்த தப்பும்  பண்ணலை அவளை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடாதீர்கள்" என அமிர்தாவின் அம்மா அனைவரிடத்திலும் கெஞ்சுகிறார்.

 

 



"அமிர்தாவுக்கும், எழிலுக்கும் கணேஷ் பற்றி எதுவும் தெரியாது அவங்க இரண்டு பெரும் கோயிலுக்கு போய் இருக்காங்க" என பாக்கியா சொல்கிறாள். அந்த நேரத்தில் அமிர்தாவும் எழிலும் வீட்டுக்கு வருகிறார்கள். அமிர்தா ஓடி வந்து அவளுடைய அம்மாவை கட்டிக்கொண்டு அழுகிறாள். 

 

அப்போது கணேஷும் அவனுடைய பெற்றோரும் பாக்கியா வீட்டுக்கு வருகிறார்கள். கணேஷை பார்த்த அமிர்தாவின் அம்மா "நான் எத்தனை தடவை  உன்கிட்ட வந்து சொன்னேன். நீ செத்தா அழணும்... நீ உயிரோட வந்தா சந்தோஷப்படணுமா? அவர் என்ன பொம்மையா? செத்து போனவன் அப்படியே போக வேண்டியது தானே... இப்போ தான் என்னோட பொண்ணு மாமனார் மாமியார், தாத்தா பாட்டி என சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கா" என கதற கணேஷின் அப்பா எழிலிடம் "அவனோட நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருப்பா. அவனோட பொண்டாட்டியும் குழந்தையும் வேணும் என்கிறான். நாங்க என்ன பண்ண முடியும்" என சொல்கிறார்.

எழில் வாழ்க்கை இப்படி ஆனதை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு பேச அமிர்தா பாட்டியின் காலில் விழுந்து "எனக்கு எதுவுமே தெரியாது பாட்டி. நான் எந்த தப்பும் பண்ணலை" என சொல்லி அழ அவளை தூக்கி விடுகிறான் எழில். என்னோட பொண்டாட்டி மேல ஏண்டா கையை வைக்குற எடுடா கையை" என்கிறான் கணேஷ்.

"அவன் பொண்டாட்டி மேல அவன் கையை வைக்குறான். உனக்கு என்னடா?" என செழியன் கோபப்பட்டு கத்த "எல்லாரும்  வாயை மூடுங்க நான் அமிர்தா கிட்ட பேசணும்" என்கிறான் கணேஷ். "நான் உன்னை நல்லா பதுக்குவேன். நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்" என கணேஷ் சொல்ல இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவடைந்தது.

அமிர்தா எடுக்கப் போகும் முடிவு என்ன என்பது நாளைய எபிசோடில் தெரியவரும்!