சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (டிசம்பர் 28) எபிசோடில் பணம் கொடுத்து ஓட்டுக்களை சேகரிக்கும் வேலையில் இருக்கிறார்கள் குணசேரனும் அவரின் சகாக்களும்.


 




ஈஸ்வரி, ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி ஓட்டு சேகரிப்பது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாம சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் ஜெயிக்கலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

குணசேகரன் பணம் பட்டுவாடா செய்தது பற்றி கணக்கு பார்க்கிறார்கள். அப்போது ஜான்ஸியும், கரிகாலனும் பொய் கணக்கு சொல்லி குணசேகரனிடம் இருந்து பணத்தை ஆட்டைய போட பிளான் போடுகிறார்கள். ஓட்டு மட்டும் விழாமல் இருக்கட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்கு என மிரட்டி விட்டு செல்கிறார் குணசேகரன்.


 




ஜனனியின் அப்பாவும் அம்மாவும் பீச்சில் உட்கார்ந்து பேசிகொண்டு இருக்கிறார்கள். ஜனனியின் அப்பா அஞ்சனாவை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனனியின் வாழ்க்கை அவளுடைய அப்பாவால் தான் கெட்டுப்போனது என அனைவரும் பேசுவது பற்றி வருத்தப்பட்டு பேசிக்கொண்டு இருக்கிறார். ஜனனியின் வாழ்க்கை வீணாகப் போனது பற்றி அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாச்சியப்பன் அவருடைய குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டது பற்றியும் ஜனனி மீது தன்னுடைய லட்சியத்தை திணிக்க நினைத்தது பற்றி பேசி கொண்டு இருக்கிறார் ஜனனியின் அம்மா. சொத்து இல்லாததால் தான் பெற்ற பிள்ளைகள் மதிக்கவில்லை என வருத்தப்படுகிறார் நாச்சியப்பன். ஜனனியை அவர் அவமானப்படுத்தியது பற்றி நினைத்து வருத்தப்படுகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய (டிசம்பர் 29) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜனனியும் சக்தியும் வக்கீல் சொன்னது போல பேக்டரியை திறந்து வேலைகளை செய்வதற்காக கிளம்புகிறார்கள். அப்போது அவர்கள் பைக்கில் சென்று கொண்டு இருக்கும்போது எதிரில் ஜனனியின் அப்பாவும் அம்மாவும் ஆட்டோவில் எதிரில் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்த்த ஜனனியின் அம்மா "இதோ பாருங்க ஜனனி போறா" என சொன்னதும் நாச்சியப்பன் ஆட்டோவை நிறுத்த சொல்கிறார். ஜனனி ஜனனி என அவளுடைய அம்மா குரல் கொடுத்தும் அவளுக்கு அது கேட்கவில்லை.




ஜான்ஸியும் கரிகாலனும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "நீ பண்ற இம்சையில் அந்த பிள்ளை அவ ஆத்தாகாரியை போய் குத்துவா... அவ ஆத்தா அப்பனை போய் குத்துவா" என பெரிய சதி திட்டம் போடுகிறார்கள். அவர்கள் பேசுவதை தர்ஷினி மாடியில் இருந்து கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.


 



 


ஜனனியும் சக்தியும் பேக்கரிக்கு சென்று பார்க்கிறார்கள். அங்கே ராமசாமி மெய்யப்பன் தன்னுடைய குடும்பத்துடன் பூஜை போட்டு கொண்டு இருக்கிறான். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜனனி "நிறுத்துங்க! யாரை கேட்டு எங்க பேக்டரியில பூஜை போட்டுக்கிட்டு இருக்கீங்க" என கத்துகிறாள். அங்கே இருந்த அவளுடைய அப்பத்தாவை பார்க்கிறாள் ஜனனி. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.