விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (நவம்பர் 11) எபிசோடில் பாக்கியா ஜெனிக்கு போன் செய்கிறாள். ஜெனி எடுக்காததால் ஜெனியின் அம்மாவுக்கு போன் செய்ய ஜெனியின் அம்மா போனை எடுத்து "உங்களுக்கு என்ன நிலமையோ அதே தான் ஜெனிக்கும் இப்போ நடந்திருக்கு. உங்களை நம்பி தானே நான் ஜெனியை உங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சேன்.


ஆனா நீங்க உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணி ஜெனிக்கு துரோகம் பண்ணிடீங்க. இனிமே யாரும் போன் பண்ணாதீங்க. என்ன செய்யணும் என நாங்களே முடிவு எடுத்துக்குறோம்" என ஜெனியின் அம்மா முகத்தில் அடித்தாற்போல சொல்லி போனை வைத்து விடுகிறார் ஜெனியின் அம்மா.


 




கோபி செழியனை கூட்டிட்டு வர போனதால் எப்போது அவர்கள் வீட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகா ரூமில் இருந்து வெளியில் வர "நீ எதுக்கு இப்போ வெளியில வந்த?" என ராதிகாவை மிரட்டுகிறார் ஈஸ்வரி. "நான் ஒன்னும் ரூமுக்குள்ளயே இருப்பேன் என அக்ரிமெண்ட் சைன் பண்ணி கொடுக்கலேயே" என நக்கலாக சொல்ல, வாய் அடைத்துப்போகிறார் ஈஸ்வரி. அந்த நேரம் கோபியும் செழியனும் வீட்டுக்கு வருகிறார்கள்.


வீட்டுக்கு வந்த செழியனிடம் "நீ எதுக்குடா அவங்க வீட்டுக்கு போன? இங்க அசிங்கப்பட்டது போதாதா?" என ஈஸ்வரி கேட்க, கடுப்பான ராதிகா கோபமாக அதுக்கு பதில் சொல்ல வர, கையெடுத்து கும்பிட்டு நீ எதுவும் பேசாத என ராதிகாவிடம் கையசைத்து காட்டுகிறார் கோபி.



சமயலறையில் பாக்கியா வருத்தமாக உட்கார்ந்து கொண்டு இருக்க, அவளுக்கு டீ போட்டுக் கொடுத்து அவள் பக்கத்திலேயே உட்காருகிறாள் ராதிகா. அப்போது செழியன் அங்கே வந்து பாக்கியாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, பாக்கியா அவன் மீது கோபப்படுகிறாள். "இந்த உலகத்திலேயே உன்னை தான் மிகவும் அதிகமாக வெறுக்கிறேன். இங்க இருந்து போடா" என விரட்டி அடிக்கிறாள் பாக்கியா.

ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து "நான் ஜெனியை நேரில் போய் பார்த்து பேசிட்டு வரப்போகிறேன். நீயும் என் கூட வா. நீ சொன்னா ஜெனி நிச்சயம் கேட்டுப்பா. அவ ஏன் கோபப்பட்டு அவங்க வீட்டுக்கு போகலாம். கோபமாக இருந்தாலும் இங்கேயே இருக்கட்டும். நாம போய் ஜெனிய கூட்டிட்டு வரலாம்"  என ஈஸ்வரி சொல்கிறார்.


"இப்போதைக்கு பொறுமையா இரு" என ராமமூர்த்தி சொல்ல, "அதெல்லாம் அப்படியே விட முடியாது" என ஈஸ்வரி  சொல்கிறார். "நான் வரமாட்டேன். என்ன எந்த நிலைமையில இந்த வீட்டில வைச்சு இருக்கீங்களோ அதே போல ஜெனியையும் இருக்க வைக்கணும் என நினைக்காதீங்க" என பாக்கியா தைரியமாக சொல்ல ஈஸ்வரி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.