புதுசு புதுசா ஷோ கண்டு பிடிக்குறாங்களே இவங்க ரூம் போட்டு யோசிப்பாங்களா எனும் அளவிற்கு புதுமைகளை வாரி வழங்கும் விஜய் டிவியில்  செப்டம்பர் 11ம் தேதி ஞாற்றுக்கிழமை 3 மணிக்கு விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி ஷோவை ஒளிபரப்ப பட உள்ளது. சென்னையில் விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மக்களை சந்தோஷப்படுத்திய பிரமாண்டமான கலை நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அறந்தாங்கி நிஷா மற்றும் மாகாபா ஆனந்த் இந்த விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் ஸ்டார்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். 


 






 


ட்ரெண்டிங் கபில்:


விஜய் டிவியின் தற்போது ட்ரெண்டிங்காக உள்ள ஜோடி அமீர் - பாவனி. சில தினங்களுக்கு முன்னர் தான் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 பைனல்ஸ் நடந்து முடிந்தது. இதன் போட்டியின் டைட்டில் வின்னர் ஆனார்கள் அமீர் - பாவனி ஜோடி. இவர்களின் காதல் தான் இன்றைய ட்ரெண்டிங் செய்தி. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த பாவனி மற்றும் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அமீர் இருவருக்கும் நட்பு மலர்ந்தது பிக் பாஸ் வீட்டிற்குள் தான். அமீர் தனது காதலை அங்கிருந்தே ப்ரபோஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். ஆனால் நம்ம பாவனி இன்னும் வாய் வார்த்தையால் காதலை ஒத்து கொள்ளவில்லை ஆனால் மற்றபடி டான்ஸ் ஷோ என்ற பேரில் திருமணம் கூட முடிந்து விட்டது. 


பயங்கரமா இம்ப்ரெஸ் பண்ணாரு அமீர்:


அமீர் - பாவனி ஜோடி பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் ரீல் ஜோடிகளாக பங்கேற்றனர். அமீர் ஒரு சிறந்த டான்ஸ் மாஸ்டர் என்பதை அந்த ஷோ மூலம் நிரூபித்து விட்டார். டான்ஸ் தெரியாத பாவனியை பக்காவாக ட்ரெயின் செய்து வெற்றியாளராக ஜெயிக்கவைத்துள்ளார். இந்த நிகச்சியின் மூலம் தான் முடிந்த வரையில் பாவனியை இம்ப்ரெஸ் செய்ய புதுசு புதுசா ட்ரை பண்ணாரு ஆனா நம்ம பாவனி எனக்கு டைம் வேண்டும் என்றே இன்னமும் ஓட்டி கொண்டே செல்கிறார். 


 






 


விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியிலும் இதே நிலைமை தான். அமீர் " எங்கேயோ போகின்ற மேகம் அழைக்குது..." என பிரமாதமாக மேடையில் டான்ஸ் ஆடி பாவனியை ப்ரபோஸ் செய்கிறார். பொதுமக்கள் பலரின் வீடியோ கிளிப்பிங் கூட இடம்பெற்றுள்ளது. நீ இப்போ தான் லவ் பண்ணுற நாங்க எப்போ இருந்தோ லவ் பண்ணுறோம் என்கிறார்... 


மிகவும் கலகலப்பாக இருக்க போகுது இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை என படு குஷியில் இருக்கிறார்கள் விஜய் டிவி ரசிகர்கள்.