பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் மகள் இனியா காணாமல் போன காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


கோபியை கல்யாணம் செய்ய ராதிகா போட்ட கண்டிஷன்


கோபியை வீட்டுக்கு வர சொல்லி அவரிடம் எப்போ கல்யாணம் வச்சிக்கலாம் என ராதிகா அம்மாவும்,அண்ணன் சந்துருவும் கேட்கின்றனர். இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் ராதிகா இப்போ கல்யாணத்துக்கு என அவசரம் என கூறுகிறார். உடனே கோபி உனக்காக தானே இவ்வளவு பண்ணேன். நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும். கோபியை கல்யாணம் பண்ணா பாக்யலட்சுமி, குடும்பத்து ஆட்கள் இவங்க எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு தானே யோசிக்கிற. நான் அந்த வீட்டை வந்துட்டேன்னு எனக்காக யாருமே வரல. நான் அனாதையா தண்ணீர் கூட கொடுக்க ஆள் இல்லாமல் இருக்கேன். நான் உன்னை ஏமாத்திருவேன்னு நினைக்கிற அப்படித்தானே என  கேட்கிறார். இதையெல்லாம் கேட்ட ராதிகா, நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணுங்க. என்னையும் மயூவையும் இப்படி ஒரு சங்கடமான நிலைக்கு தள்ள மாட்டிங்கன்னு  என கேட்க உயிரே போனாலும் அப்படி ஒரு சூழல்  என கோபி சத்தியம் செய்கிறார். 


பாக்யாவின் அடுத்த திட்டம் 


குடும்பத்தை காப்பாற்ற பெரிய வேலை ஏதாவது செய்யணும் என நினைக்கிற பாக்யாவுக்கு கல்யாண மண்டபத்தில் சமையல் வேலைக்கு காண்டிராக்டர்கள் தேவை என்னும் விளம்பரம் கண்ணில் படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கப் போவதாக தெரிவிக்க செல்வியும்,ஜெனியும் சரிபட்டு வராது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் பாக்யா தன் முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். கடைசியாக எனக்கு இதில் உடன்பாடில்லை. ஆனால் அப்ளை செய்து தருகிறேன் என்கிறார். 


காணாமல் போன இனியா 


ஸ்கூலில் இனியாவை சந்திக்கும் கோபி, அவள் ஸ்கூல் பஸ்ஸில் வரும் தகவல் கேட்டு பாக்யா மீது ஆத்திரமடைகிறார். பின் இன்னும் கொஞ்ச நாளில் நானே உன்னை அழைத்துச் செல்கிறேன் என ஆறுதல் தெரிவிக்கிறார். பின் நாம வெளியே போய் ரொம்ப நாளாச்சு.ஐஸ்க்ரீம் அல்லது ஹோட்டல் போய் சாப்பிடலாம் என அழைத்துப் போகிறார். ஆனால் ஸ்கூல் முடிந்து இனியா வராததால்  பதட்டமாகும் பாக்யா பஸ் டிரைவருக்கு போன் செய்கிறார். அவரோ இனியா சாயந்திரம் பஸ்ஸில் வரவில்லை என்றும், நான் தேடி பார்த்தேன் ஸ்கூல்ல கூட இல்ல எனவும் தெரிவிக்கிறார். இதுதான் நேரம் என ஈஸ்வரி கோபி புராணம் பாடி பாக்யாவை திட்டுகிறார். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.