சன் டிவி சீரியல்களுக்கு என்றுமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல்' சீரியல் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. ஐந்து ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட சீரியலை திடீரென முடித்ததை எண்ணி எதிர்நீச்சல் ரசிகர்கள் மிகுந்த மனவருத்தம் அடைந்தனர். 



பெண்களை அடிமையாக நடத்தும் ஒரு குடும்பத்தை சுற்றிலும் நகரும் கதைக்களத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளனர். அதிலும் முக்கியமாக கதையின் நாயகனான ஆதி குணசேகரன் கேரக்டர் தான் சீரியலையே தூக்கி நிறுத்தியது. அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து தனக்கே ஒரு தனி பெஞ்ச் மார்க் செட் செய்து வைத்திருந்தார்.


அதிலும் குறிப்பாக 'இந்தாம்மா ஏய்' என அவர் அடிக்கடி சொல்லும் டயலாக் பெரிய அளவில் ட்ரெண்டிங்கானது. ஆனால் திடீரென நடிகர் மாரிமுத்துவின் மறைவு ரசிகர்களையும் சீரியல் குழுவையும் நிலைகுலைய செய்தது. 


ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அடுத்ததாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழும்போது எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார். மாரிமுத்துவின் லெவலுக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. தன்னுடைய ஸ்டைலில் அவர் சிறப்பாக நடித்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.


வில்லத்தனமே தெரியாமல் நாசுக்காக நக்கல் செய்ய கூடிய மாரிமுத்து இருந்த இடத்தில் கரடு முரடான கேரக்டரில் வில்லத்தனத்துடன் இருந்த வேல ராமமூர்த்தியின் நடிப்பு கதைக்களத்தை முற்றிலுமாக மாற்றியது. 



 


டி.ஆர்.பி ரேட்டிங் லிஸ்டில் முன்னிலை இடத்தை பல காலமாக தக்க வைத்து வந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு இருந்த வரவேற்பு குறைய காரணம் வேல ராமமூர்த்தி தான் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.


ஆனால் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும், ரசிகர்களுக்கு அவரை பிடிக்கவே இல்லை அதனால் அவமானமாக இருக்கிறது என அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 


எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வர வேல ராமமூர்த்தி மட்டுமே காரணம் என சொல்லிவிட முடியாது. அதற்கு வெளியில் சொல்ல முடியாத வேறு பல காரணங்களும் இருக்கலாம். ஒருவரால் மட்டுமே சீரியல் முடிவுக்கு வந்தது என சொல்வது சரியானதல்ல. அதே பரபரப்புடன் விறுவிறுப்புடன் விரைவில் எதிர்நீச்சல் 2 துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.