Maari Serial: தினேஷூக்கு திருமணம், வீடு தேடி வந்த மாப்பிள்ளை வீட்டார், கடைசியில் ட்விஸ்ட் - மாரி சீரியல் அப்டேட்!
Maari Serial Today June 15: தாராவின் குடும்பத்திற்கு ஒரு புதிய விருந்தினர் வர எல்லோரும் யார் என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.

Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இதிலிருந்து மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெண்ணிலா மீது போடப்பட்ட பழியை தகர்த்தெறிந்து மாரி உண்மையை நிரூபித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது தாராவின் குடும்பத்திற்கு ஒரு புதிய விருந்தினர் வர எல்லோரும் யார் என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். அதன் பிறகு தாரா அங்கு வந்து "இவங்கள நான் தான் வர சொல்லி இருந்தேன், தினேஷூக்கு பெண் பார்க்க வந்திருக்கிறார்” என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
Just In




அதுமட்டுமின்றி எதுக்கு இந்த ஏற்பாடு என்று எதிர்ப்பு தெரிவிக்க, தினேஷூம் “ஸ்ரீஜா இப்போ திருந்திட்டா.. நல்லபடியா இருக்கா, அப்படி இருக்கும்போது எதுக்குமா இந்த ஏற்பாடு?” என்று கோபப்படுகிறான். தாரா “நான் அவளுக்கு கர்ப்பமாக கொஞ்சம் டைம் கொடுத்து இருந்தேன், ஆனா அவ இதுவரைக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் சொல்லல. அதனால இனிமேலும் பொறுமையா இருக்க முடியாது” என்று சொல்ல ஸ்ரீஜா கண்ணீர் விடத் தொடங்குகிறாள்.
இந்த சமயத்தில் திடீரென அவள் மயங்கி விட டாக்டரை வீட்டுக்குக் கூப்பிட்டு பரிசோதனை செய்ய, அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷப்பட தாராவின் திட்டம் தவிடு பொடியாகிறது. இப்படியான நிலையில் இந்த வார மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ (ஸ்பாய்லர் இல்லாமல்)