Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமச்சந்திரன் ராஜேஷின் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர, வள்ளி இதைப் பார்த்து அதிர்ச்சியான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, வள்ளி “இவங்கள எதுக்குண்ணே இங்க நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு வந்து இருக்க?” என்று சத்தம் போடுகிறாள். ராமசந்திரன் “அவங்களும் நம்ம குடும்பத்துல ஒருத்தவங்க தான்” என்று சொல்கிறார். வள்ளி திரும்பத் திரும்ப எதிர்த்து பேசியும் ராமசந்திரன் வள்ளி பேச்சைக் கேட்காமல் ராஜேஷின் அம்மாவை மேலே அழைத்துச் செல்ல சொல்ல, கண்மணியும் அவளை மேலே அழைத்து செல்கிறாள்.
அடுத்து வீரா ராமச்சந்திரனிடம் சென்று “வள்ளி அம்மா சொல்றது சரி தான், நீங்க அவங்களுக்கு உதவி பண்றதா இருந்தா வெளியே எங்கயாவது தங்க வச்சி கூட உதவி செய்து இருக்கலாம். எனக்கு இது சரியா படல” என்று சொல்ல, ராமசந்திரன் “அதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்று சொல்லிவிட, வீராவின் அம்மா “அவங்க இருந்தா என்னடி ஆகப் போகுது?” என்று கேட்க, கல்யாண மண்டபத்தில் ராஜேஷின் அம்மா மாறனை குத்த வந்த கதையை சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அடுத்து வீரா மாறனிடம் உஷாராக இருக்கச் சொல்லி வார்னிங் கொடுக்கிறாள்.
கண்மணியும் ராஜேஷின் அம்மாவின் “நம்ம திட்டம் சக்ஸ்ஸஸ் ஆகிருச்சு” என்று சிரித்து கொள்கின்றனர். பிறகு கண்மணி கீழே இறங்கி வர, வள்ளி “நீ நினைச்சது நடந்துடுச்சு.. சந்தோசமா?” என்று வள்ளி கேள்வி கேட்க, கண்மணி “நான் என்னமா பண்ணேன், மாமா எடுத்த முடிவு தானே?” என்று சொல்கிறாள். அடுத்த நாள் துணி கடைக்கு வந்த ராமசந்திரன், “சூரத்ல இருக்க கடைக்கு ஏன் இன்னும் பணம் அனுப்பல, பணம் போனா தானே சரக்கு அனுப்புவாங்க?” என்று சத்தம்போட, ஆடிட்டர் “அதெல்லாம் மாறன் தம்பி தான் பாத்துக்கிறாரு” என்று சொல்ல, ராமசந்திரன் மாறனைக் கூப்பிட்டு வைத்து திட்டி அடிக்கப்போக வீரா ராமசந்திரன் கையை பிடித்து அவர் பணம் அனுப்பாதது நல்லது தான் என்று சொல்கிறாள்.
“லாஸ்ட் டைம் அவங்க அனுப்பினதுல 17% ஸ்டாக் லோ குவாலிட்டி, இதனால் நமக்கு 12 லட்சம் நஷ்டம்” என்று சொல்ல, ராமசந்திரன் “இவன் அதையெல்லாம் யோசித்து இருக்க மாட்டான். போதையில் மறந்து இருப்பான்” என்று திட்டுகிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த மாறன் குடித்துக்கொண்டே வீரா தனக்காக அப்பாவின் கையைப் பிடித்த விஷயத்தை நினைத்து சந்தோசப்பட்டு வீராவுக்கு போன் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.