Siragadikka Aasai Written Update :  'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய (ஜூன் 12) எபிசோடில் மீனாவை காணவில்லை என முத்துவும் செல்வமும் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்பளைண்ட் கொடுக்க போகிறர்கள். ஆனால் அதற்கு முன்னரே "என்னுடைய அக்காவை காணவில்லை. மாமா மீது தான் சந்தேகமாக இருக்கிறது. அவர் பெயரில் கம்பளைண்ட் எடுத்துக்கோங்க" என சொல்லி சத்யா முத்து பெயரில் புகார் கொடுக்கிறான். அங்கே சத்யா இருப்பதை பார்த்து முத்துவும் செல்வமும் ஷாக்காகிறார்கள். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இன்ஸ்பெக்டர் இருவரையும் திட்டி அடக்குகிறார். 24 மணிநேரத்துக்கு பிறகு தான் கம்பளைண்ட் எடுத்துக்க முடியும் என சொல்லி முத்துவையும் சத்யாவையும் அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர். 



 


எங்கெங்கோ தேடி அலைகிறார்கள் செல்வமும் முத்துவும், மீனா வழக்கமாக செல்லும் அனைத்து இடங்களுக்கும் சென்று விசாரிக்கிறான் முத்து. ஆனால் மீனா அங்கு வரவேயில்லை என சொன்னதும் முத்துவுக்கு பதட்டம் அதிகமாகிறது. ஒரு கோயில் வாசலில் நின்று மனம் வருந்தி அழுகிறான். மீனாவை அப்படி காயப்படுத்துவது போல பேசியது தப்பு தான் என வருந்துகிறான். செல்வம் முத்துவை சமாதானம் செய்து வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறான். 



வீட்டுக்கு வந்ததும் மீனா வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்  முத்து. மீனாவை போய் திட்டுகிறான், அதற்குள் அண்ணாமலையும் மற்றவர்களும் வந்து விடுகிறார்கள். "மீனா வீட்டுக்கு வந்துட்டா என நானே உனக்கு போன் பண்ணி சொல்லலாம் என நினைத்தேன்" என அண்ணாமலை சொல்கிறார். சொல்லாம எங்க போன என திட்டிவிட்டு அவளை கட்டிப்பிடித்து அழுகிறான் முத்து. அதை பார்த்து மற்றவர்கள் வெட்கத்தில் திரும்பி கொள்கிறார்கள். 


 



"உன்னை தேடி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் எல்லாம் தேடினேன். போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போய் கம்பளைண்ட் கொடுத்துட்டு வந்து இருக்கேன்" என முத்து சொல்கிறான். "என்ன பிரச்சினை நடந்தாலும் சொல்லாமல் கோச்சிக்கிட்டு வீட்டை விட்டு போகலாமா?" என அண்ணாமலை கேட்க "நான் எங்க கோச்சுக்கிட்டு வீட்டை விட்டு போனேன்" என மீனா சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்போது தான் மீனா நடந்ததை பற்றி சொல்கிறாள். 


 


"கோயில் கும்பாபிஷேகத்துக்கு பூ கட்டி கொடுக்க வந்து கூப்பிட்டாங்க. ஒரு நாளைக்கு மூணாயிரம் ரூபாய் கொடுப்பாங்கனு சொல்லி அவங்களே ஆட்டோவில் கூட்டிட்டு போனாங்க. ஸ்ருதி கிட்ட சொல்லிட்டு தானே போனேன்" என்கிறாள் மீனா. ஸ்ருதி ப்ளூ டூத்தை காதில் மாட்டிக்கொண்டு போனில் பேசிக்கொண்டு இருந்ததால் மீனா சொன்னது எதுவும் காதில் விழவில்லை. 


 




மீனா ஸ்ருதியிடம் சொல்லிட்டு போனதை அவள் சொல்லவே இல்லையே என ரவி சொல்ல அப்போது ஸ்ருதி வீட்டுக்கு வருகிறாள். "எங்க மீனா போனீங்க? முத்து நீங்க காணும்னு ரொம்ப பயந்து போயிட்டாருனு ரவி சொன்னான்" என சொன்னதும் அனவைரும் ஸ்ருதியை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். உங்க கிட்ட சொல்லிட்டு தானே ஸ்ருதி போனேன் என மீனா சொல்ல என்கிட்டயா இல்லையே என்கிறாள் ஸ்ருதி. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை கதைக்களம்.