Veera Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமசந்திரன் மாறனை அடித்து வெளியே தள்ளிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மாறன் வீராவுக்கு போன் செய்ய சவாரிக்காக ஆட்டோவில் காத்திருக்கும் அவள் போனை எடுக்காமல் இருக்க, மாறன் நீ எடுக்கிற வரைக்கும் போன் பண்ணிகிட்டே தான் டி இருப்பேன் என்று போன் செய்து கொண்டே இருக்கிறான்.
ஒரு கட்டத்தில் கடுப்பான வீரா “போனை எடுத்து எடுக்கலனா விட வேண்டியது தானே.. எதுக்கு டா திரும்ப திரும்ப போன் பண்ற?” என்று கோபப்படுகிறாள். மாறன் “போதையில் என்னை வேண்டாம்னு சொல்லிட்டல” என்று புலம்ப, “குடித்து இருக்கியா” என்று வீரா கேட்க, இவனும் ஆமாம் என்று சொல்ல நீயெல்லாம் திருந்தவே மாட்ட என்று திட்டுகிறாள். வீரா போனை வைக்க போக மாறன் ராமசந்திரன் அடித்து வெளியே தள்ளிய விஷயங்களை சொல்கிறான். திரும்பவும் மாறன் குடிக்க ஆரம்பிச்சுட்டான் என்ற வருத்தத்தோடு போனை கட் செய்கிறாள்.
அடுத்த நாள் காலையில் ராமச்சந்திரன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கண்மணி மாறனுக்கு சப்போர்ட் செய்து பேசுவதோடு அவருக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா திருந்திடுவாரு என்று சொல்கிறாள். ராமசந்திரன் “அவனே ஒரு குடிகாரன்.. அவனுக்கு கல்யாணம் ஒன்னு அவசியமா?” என்று எழுந்து செல்ல, ராகவன் “கண்மணி சொல்றது சரி தானே?” என்று சொல்ல ராமசந்திரன் “அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க விரும்பல” என்று பதிலடி கொடுக்கிறார்.
அடுத்து மாறன் கடைக்கு வர, வீராவைப் பார்த்து முறைத்து விட்டு பக்கத்தில் இருந்தவனை சரியா வேலை செய்யுடா என்று திட்ட, வீரா “என் மேலே இருக்க கோபத்தை அவன் மேல காட்டாத” என்று சொல்கிறாள். மாறன் “எனக்கு உன் மேலே எல்லாம் கோபம் கிடையாது. இவனை நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். சரியா வேலை செய்யுறது இல்ல அதான் திட்டினேன்” என்று சொல்கிறான்.
மறுபக்கம் கண்மணி மேலே வர ராஜேஷின் அம்மா “என்ன கண்மணி? இந்த வீட்டோட மருமகளா மாறிட்ட போல, மாறனுக்கு கல்யாணம் பண்ணனும்னு பேசுற” என்று கேட்க, “அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா ஆசைப்பட்ட பொண்ணு கிடைக்கலனு காலம் முழுக்க கஷ்டப்படுவான், வீராவுக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம்” என்று திட்டத்தை சொல்கிறாள்.
அடுத்து கடையில் ஒருவன் தண்ணீர் பிடிக்க வர தண்ணீர் வராத காரணத்தால் ஸ்விட்ச்சில் கை வைக்க அவனுக்கு ஷாக் அடிக்க, உடனே வீரா அவனைப் பிடித்து இழுக்க வீராவுக்கு ஷாக் அடிக்க மாறன் கட்டையை எடுத்து இருவரையும் அடித்து கீழே தள்ளி காப்பாறுகிறான். வீரா “நேத்து நடந்த விஷயத்தால் நீ என்னை கட்டையால் அடிச்சு கோபத்தை தீர்த்துக்கிட்ட” என்று சொல்ல மாறன் அப்படி இல்லை என்று சொல்கிறான்.
பிறகு வீரா “சரி முன்ன மாதிரி எல்லாம் என்னால் இருக்க முடியாது . என்னனா என்னனு பேசிக்கிற பிரண்டா இருக்கலாம்” என்று சொல்ல, மாறன் “என்னால அப்படி இருக்க முடியாது” என்று மீண்டும் தனது மனதில் இருக்கும் காதலை சொல்ல, வீரா உன்னையெல்லாம் திருத்த முடியாது என்று திட்டி செல்கிறாள்.
அடுத்ததாக கண்மணி மீண்டும் ராமச்சந்திரனிடம் பேச வர அவர் என்னமா மாறனுக்கு சப்போர்ட் பண்ணி பேச போறயா என்று கேட்க “இல்ல மாமா, அவருக்கு கல்யாணம் பண்ணா அதே மேடையில் வைத்து வீராவுக்கும் கல்யாணம் பண்ணி முடிச்சிடுவேன், ஒரே செலவா போய்டும்” என்று சொல்ல ராமசந்திரன் “என்ன திடீர்னு வீராவுக்கிய கல்யாணம் பண்றத பத்தி பேசுற?” என்று ஷாக்காகிறார். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.