Siragadikka Aasai Serial July 10: மனோஜை பிடிக்க செம ஸ்கெட்ச் போட்ட முத்து.. மாட்டப்போகும் விஜயா - சிறகடிக்க ஆசை இன்று!

Siragadikka Aasai Today: மனோஜ் தான் நகையை மாற்றி வைத்து இருப்பான் என்பதைக் கண்டுபிடிக்க முத்து போட்ட பிளானுக்கு உதவி செய்யும் ஸ்ருதி...

Continues below advertisement

Siragadikka Aasai Serial July 10:  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவின் வீட்டில் தான் கவரிங் நகையாக போட்டு இருப்பார்கள் என அப்படியே பழியை மீனா குடும்பத்தின் மீது திருப்பிவிடுகிறாள் விஜயா. 

Continues below advertisement

"விஜயா: கல்யாணத்துக்கு போடும்போதே கவரிங் நகையாக போட்டு இருப்பாங்க. அவ தான் அடிக்கடி அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரா. அவங்க வீட்ல ஏதாவது கஷ்டம் என நகையை மாத்தி இருப்பாங்க. அந்த வீட்ல தான் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கானே.. அவன் இவளுக்குத் தெரியாமலே எடுத்து மாத்தி வைச்சு இருப்பான்.

 

 

மீனா: போதும் நிறுத்துங்க அத்தை.. எங்க அப்பா உழைச்சு சம்பாதிக்கணும்னு தான் சொல்லி கொடுத்து இருக்காரு. இந்த மாதிரி அடுத்தவங்களோட பொருளுக்கு எல்லாம் ஆசை பட மாட்டோம். எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்தாதீங்க" என கோபப்படுகிறாள்.

"விஜயா: அப்போ நான் மாத்தி வைச்சுட்டேன் என சொல்லி என் பக்கம் திருப்பி விடுறியா? உங்க வீட்ல தான் கவரிங் நகை போட்டு இருக்காங்க

அண்ணாமலை: நிறுத்து விஜயா. வளையல், செயின் எல்லாம் எங்க அம்மா வாங்கிக் கொடுத்தாங்க.

விஜயா: அப்போ உங்க அம்மாவுக்கு நகை செஞ்சு கொடுத்த இடத்துல ஏமாத்தி இருப்பாங்க.

அண்ணாமலை: போதும் நிறுத்து விஜயா. எங்க அம்மா எல்லாருக்கும் வாரி குடுக்குறவங்க. அவங்க மேலேயே பழி சொல்றியா?" என கோபப்படுகிறார்.

ஸ்ருதி: அப்போ போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்” என்கிறாள். அதைக் கேட்டு விஜயாவும் மனோஜும் டென்ஷனாகிறார்கள். அதை மீனாவும் முத்துவும் நோட்டீஸ் செய்து விடுகிறார்கள்.

"அண்ணாமலை: போலீஸ் எல்லாம் வேணாம். நம்ம குடும்ப மானம் தான் போகும்.

முத்து: நானே கண்டுபிடிக்கிறேன்" என்கிறான். 

 

விஜயா மனோஜைத் திட்டுகிறாள். சீக்கிரமாக நகையை வாங்கி வைக்க சொல்லி சொல்கிறாள். மீனாவும் முத்துவும் நகையை யார் மாற்றியது என்பதைக் கண்டுபிடிக்க ஐடியா ஒன்று செய்கிறார்கள். அதற்கு ஸ்ருதியின் உதவியை நாடுகிறார்கள். ரவியின் ஹோட்டலுக்கு ஸ்ருதியை வர சொல்கிறார்கள்.

ஸ்ருதி ரவியிடம் இந்த பிளான் பற்றி சொல்கிறார்கள். கவரிங் நகை கடையில் இருந்து ஃபீட் பேக் கேட்பது போல குரலை மாற்றி மனோஜிடம் பேசி உண்மையை தெரிந்து கொள்வதற்காக ஸ்ருதியின் உதவியைக் கேட்கிறார்கள். ரவி வேண்டாம் என மறுத்தும் ஸ்ருதி பேசுவதாக சொல்கிறாள்.

மனோஜ் ஷோரூமில் தூங்கிக்கொண்டே கனவில் "என்னுடைய பணத்தைக் கொடுங்க. என்னோட நாலு லட்சம் வேணும். நகையைக் கொடுங்க" என புலம்புகிறான். அப்பேது ரோகிணி வந்து என்ன உளறிட்டு இருக்க என மனோஜை எழுப்பி விடுகிறாள்.  

ஸ்ருதியும் மனோஜூக்கு போன் செய்து குரலை மாற்றிப் பேசி “நகை வாங்கிய உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?” எனக் கேட்கிறாள். மனோஜ் தட்டுத் தடுமாறி பேசியது சந்தேகத்தை வர வைக்கவே, ஸ்ருதி தொடர்ந்து மனோஜிடன் பேசுகிறாள்.

மறுபக்கம் ரோகிணிக்கு க்ரிஷ் ஃபோன் செய்து பேசுகிறான். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement