Veera Serial: மாறனை அறைந்த கண்மணி.. அப்பாவை மீறி ராகவன் கொடுத்த அதிர்ச்சி.. வீரா சீரியல் அப்டேட்!

Veera Serial Today 24th May: சத்தம் கேட்டு ராமச்சந்திரனும் அங்கு வந்து குடம் கீழே சிதறி கிடப்பதைப் பார்த்து என்னாச்சு என்று கேட்க, கண்மணி நடந்ததை சொல்ல அவர் மாறனைப் பிடித்து திட்டுகிறார்.

Continues below advertisement

Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவன் கண்மணிக்காக காபி போட்டுக் கொண்டு போக அதைப் பார்த்து வள்ளி கடுப்பான நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது, ராகவன் கண்மணிக்கு காபி கொண்டு வந்து கொடுத்து “நீ நல்லா ரெஸ்ட் எடு.. பொறுமையாகவே எழுந்திரு. இங்க வேலையெல்லாம் செய்ய நிறைய பேர் இருக்காங்க” என்று சொல்லி வெளியே செல்ல வீரா “இனிமே நீ தான் சீக்கிரமாக எழுந்து எல்லா வேலையையும் செய்யணும்” என்று அட்வைஸ் செய்கிறாள். 

அடுத்து கண்மணி எழுந்து ரெடியாகி கிச்சனுக்கு வருகிறாள். அங்கு வள்ளி சமையல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க கண்மணி, “நான் என்ன வேலை செய்யணும்?” என்று கேட்டு காய்கறிகளை வெட்டப் போக “அதெல்லாம் தொடாத, இந்த வீட்டிற்கு வந்த மருமகள் முதல்ல ஒரு குடம் தண்ணியை சிந்தாமல் வீட்டிற்கு கொண்டு வந்த வைக்க வேண்டும். அது தான் முறை” என்று சொல்லி குடத்தை எடுத்துச் சென்று பின்னாடி இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்கிறாள். 

கண்மணியும் கிணற்றில் தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்ளே வர, இதைப் பார்த்த மாறன் “அண்ணி நீங்க எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யறீங்க?” என்று உதவப் போய் குடத்தை வாங்க முயற்சி செய்ய, கண்மணி மாறனிடம் விடு என்று கோபப்பட, சத்தம் கேட்டு எல்லாரும் கூடி விடுகின்றனர். மாறனால் குடம் வழுக்கி கீழே விழ, கண்மணி அவனை கன்னத்தில் பளாரென அறைகிறாள். 

இதைப் பார்த்து வள்ளியும் ராகவனும் அதிர்ச்சி அடைய, வள்ளி கண்மணியைப் பிடித்து கண்டபடி திட்ட சத்தம் கேட்டு ராமச்சந்திரனும் அங்கு வந்து குடம் கீழே சிதறி கிடப்பதைப் பார்த்து என்னாச்சு என்று கேட்க, கண்மணி நடந்ததை சொல்ல அவர் மாறனைப் பிடித்து திட்டுகிறார். ராகவன் மாறனிடம் மன்னிப்பு கேட்க சொல்ல, ராமச்சந்திரன் “அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்ல, ராகவன் கண்மணி மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என்று சொல்கிறான். 

உடனே கண்மணி “கேக்கலைனா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்க, “இனிமே நீ இந்த வீட்டில் இருக்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement