'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai) சீரியல் இன்றைய (மே 24) எபிசோடில் ஷோரூம் திறப்பு விழா சிறப்பாக துவங்குகிறது. ஸ்ருதியின் அம்மா வருகைக்காக காத்திருந்த விஜயா அவர் வந்தவுடன் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறாள். மீனாவின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லையே என அண்ணாமலை மீனாவிடம் கேட்க "நான் யாரையும் கூப்பிடவில்லை. அவங்க இங்க வந்தா அவமானம் தான் படணும்" என மீனா வருத்தமாக சொல்கிறாள். "பொறாமை புடிச்சவங்க. அவங்க எதுக்கு வரணும். வந்து என்ன வாங்க போறாங்க. ஸ்ருதி அம்மா பெரிசா ஏதாவது வாங்குவாங்க" என மீனா அம்மாவை இளக்காரமாக பேசுகிறாள் விஜயா. அண்ணாமலை விஜயாவை கண்டிக்கிறார்.


 





ஸ்ருதியின் அம்மா ஒன்றரை லட்சத்துக்கு ஏசி ஒன்று வாங்க அவருக்கு ஏக போக வரவேற்பு கிடைக்கிறது. மீனா ஒரு மிக்ஸி வாங்குகிறாள். ஆனால் மீனா கையால் முதல் வியாபாரம் செய்யக்கூடாது என ஸ்ருதியின் அம்மாவிடம் முதலில் பணத்தை வாங்கி பில் போட்டு கொடுக்கிறான் மனோஜ். மீனாவுக்கு வியாபாரம் செய்ய மனோஜ் தயங்குவதை பார்த்து பாட்டி மனோஜை திட்டி வாங்க சொல்கிறார். பாட்டி விஜயாவை தனியாக அழைத்து சென்று பயங்கரமாக திட்டுகிறார். "எல்லாரையும் ஒரே மாதிரி நடத்த கத்துக்கோ. மீனாவை இனி அவமானப்படுத்தி பேசுனா அவளுக்காக நான் வந்து நிப்பேன். என்னை பத்தி தெரியும் இல்ல" என மிரட்டிவிட்டு செல்கிறார்.


 





மனோஜ் வியாபாரம் செய்த பணத்தை எண்ணி கொண்டு இருக்கிறான். ரோகிணி அவனை பார்த்து சந்தோஷப்படுகிறாள். இந்த ஷோரூமை பெரிய அளவில் கொண்டு வரவேண்டும் என இருவரும் பேசி கொள்கிறார்கள். அப்போது மனோஜ் அது எல்லாத்துக்கும் எனக்கு ஒரு ஐடியா இருக்கிறது என சொல்லி பழைய ஸ்டாஃப்ஸ் அனைவரையும் அழைத்து "நீங்கள் இதுவரையில் இங்கே வேலை பார்த்தது போதும். இளைஞர்களை நான் வேலைக்கு சேர்க்க போகிறேன்" என கர்வமாக பேசுகிறான். பழைய ஊழியர்கள் அனைவரும் மிகவும் வருத்தத்துடன் வெளியே சென்று விடுகிறார்கள்.  மனோஜ் அதட்டலாக பேசியதை பார்த்து ரோகிணி சந்தோஷப்படுகிறாள்.

இரவு ஷோரூம் மூடியதும் மனோஜும் ரோகிணியும் வீட்டுக்கு வருகிறார்கள். காலையில் இருந்து நிறைய வேலை செய்ததால் மிகவும் அசதியாக இருக்கிறது என மனோஜ் சொல்லிக்கொண்டே வருகிறான். அவர்களுக்காக காத்திருந்த விஜயா "எல்லாருடைய திருஷ்டியும் உன் மேல தான் இருக்கும். நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன்" என சந்தோஷமாக  ஓடுகிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோட் கதைக்களம்.