Veera Serial: ராமச்சந்திரனை வைத்து பிளான் போடும் கண்மணி.. கல்யாண விஷயத்தில் வீரா எடுத்த முடிவு.. வீரா சீரியல் அப்டேட்!

Veera Seial Today July 12: வீராவுக்கு ஒரு புது நம்பரில் இருந்து போன் வர எடுத்து பேசும்போது “ஒரு பெண் நான் இங்க தனியா இருக்கேன் வா.. என்னை வந்து கூட்டிட்டு போங்க, பயமா இருக்கு” என்று சொல்கிறார்.

Continues below advertisement

Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கண்மணி கல்யாணம் விஷயமாகப் பேச, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று ரூமுக்குள் சென்று விட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது வள்ளி “நீ எதுக்கு அந்த வீராவுக்கு மாப்பிளை பார்க்கணும்? உனக்கு எதுக்கு அந்த வேலை? ஏன் அவங்க கண்மணி மூலமாக உன்னை மாப்பிள்ளை பார்க்க சொன்னார்களா?” என்று கேள்வி கேட்டு கோபப்பட, ராமசந்திரன் “வீரா என்னுடைய பொண்ணு மாதிரி.. அதுவும் என்னுடைய குடும்பம் தான்” என்று பிடித்து திட்டி விடுகிறார். 

மறுபக்கம் கண்மணி “உனக்கு எதுக்கு கல்யாணம் வேண்டாம்? யாரையாவது லவ் பண்றயா? சொல்லு நான் போய் பேசறேன்” என்று சொல்ல, வெளியே வந்த வீரா “நான் யாரையும் காதலிக்கல.. காதலிக்கிற நிலைமையிலும் இல்லை” என்று சொல்கிறாள். “எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்” என்று மீண்டும் சொல்கிறாள். 

அடுத்து வீராவுக்கு ஒரு புது நம்பரில் இருந்து போன் வர எடுத்து பேசும்போது “ஒரு பெண் நான் இங்க தனியா இருக்கேன் வா.. என்னை வந்து கூட்டிட்டு போங்க, பயமா இருக்கு” என்று சொல்ல, வீரா ஆட்டோவை எடுத்துக் கொண்டு கிளம்பிச் செல்கிறாள். போனில் சொன்ன இடத்திற்கு வந்து தேட அங்கு யாரும் இல்லாமல் இருக்க மாறன் பொண்ணு போலவே பேசிக்கொண்டு வெளியே வருகிறான். 

“உன்னை பாக்கணும்னு தோணுச்சு, அதான் வர வச்சேன்” என்று சொல்ல, வீரா அவனைத் திட்டுகிறாள். பிறகு “தேங்க்ஸ் சொல்ல என்ன காரணம்?” என்று கேட்க, “நீ முன்னாடியே சொன்னதால் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு என் அக்கா கிட்ட சொல்ல முடிந்தது” என்று சொல்கிறாள். மாறன் “அப்போ உனக்கு உண்மையாகவே இதுல விருப்பம் இல்லையா? அப்போ உன்னை கரெக்ட் பண்ண எனக்கு இன்னும் டைம் இருக்கு” என்று பேச வீரா அவனைத் திட்டி விடுகிறாள். 

பிறகு சவாரி ஒன்று வர வீரா கிளம்பிச் செல்ல, மாறன் அவளை பின்தொடர்ந்து வருகிறான். அடுத்த நாள் ப்ரோக்கர் வீட்டுக்கு வந்து ஒரு மாப்பிள்ளை போட்டோவைக் காண்பிக்க, ராமசந்திரன் அந்த போட்டோவை எல்லாரிடமும் காட்டுகிறார். கண்மணி “வீரா இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றா.. நீங்க பேசுனா அவ கண்டிப்பா கேட்பா” என்று சொல்ல சரியாக அந்த நேரம் வீரா தன்னுடைய குடும்பத்துடன் வர, ராமசந்திரன் “எதுக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?” என்று கேட்கிறார். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் என்று சொல்ல, ராமசந்திரன் மாப்பிள்ளையை பார்த்துட்டு சொல்லு என்று சொல்கிறார்.

பிறகு கண்மணியும் அம்மாவும் வீராவை ரூமுக்குள் அழைத்துச் சென்று விட, வீரா நான் சொல்றத கேட்க மாட்டிங்களா என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola