Siragadikka Aasai July 12 : எஸ்கேப்பாக உதவி செய்யும் விஜயா... நிரூபித்த முத்து - சிறகடிக்க ஆசையில் இன்று 

Siragadikka Aasai : மனோஜ் பணத்தை கோட்டைவிட்டதை கண்டுபிடித்த முத்து அதை வீடியோ ஆதாரத்துடன் வீட்டில் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மனோஜ் மாட்டிக்கொள்ள கூடாது என விஜயா என்ன செய்தாள் தெரியுமா?

Continues below advertisement

Siragadikka Aasai serial July12 :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவும் செல்வமும் பாதி விலையில் பொருட்களை கொடுக்கும் கடைக்கு சென்று பிரிட்ஜ் ஒன்றை வாங்க விலை பேசி இருக்கிறார்கள்.

Continues below advertisement

அந்த நேரத்தில் போலீஸ் வந்து அது அனைத்தும் திருட்டு பொருட்கள் என சொல்லி அனைவரையும் கைது செய்து அழைத்து செல்கிறார்கள். பொருள் வாங்க வந்த செல்வமும் முத்துவும் கூட அந்த திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்து அவர்களையும் கைது செய்து அழைத்து செல்கிறார்கள்.

 

"நாங்கள் பொருட்கள் வாங்க வந்தவர்கள்தான்" என முத்து எவ்வளவு கெஞ்சியும் போலீஸ் விசாரித்தபிறகு தான் விட முடியும் என சொல்லிவிடுகிறார்கள்.
திருடிய பொருட்களை எல்லாம் திரும்ப எடுத்து கொள்வதற்காக மனோஜ் போலீஸ் ஸ்டேஷன் வருகிறான். தன்னுடைய கடை பொருட்கள் எதுவுமே அங்கே இல்லை என சொல்கிறான். மனோஜ் குரலை கேட்டு முத்து அவன் என்ன பேசுகிறான் என்பதை போனில் ரெக்கார்ட் செய்து கொள்கிறான்.

பணத்தை ஏமாந்தது பற்றியும் 4 லட்சம் ரெடி செய்து டீலருக்கு 3 லட்சம் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் லாபம் கிடைத்ததாக வீட்டில் சொல்லிவிட்டதாகவும் மனோஜ் இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறான். பொருட்கள் கிடைத்ததும் தகவல் சொல்வதாக சொல்லி மனோஜை அனுப்பி வைக்கிறார் இன்ஸ்பெக்டர்.

வீட்டுக்கு வந்த முத்து அனைவரையும் ஹாலுக்கு அழைத்து மனோஜ் பற்றி படம் ஒன்று காட்டப் போவதாக சொல்லி ஷாக் கொடுக்கிறான்.

"4 லட்சத்துக்கு பொருள் விற்றதாக சொன்னானே 4 லட்சத்தை ஏமாந்தது பற்றி சொன்னானா? " என கேட்க ரோகிணிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மனோஜ் பேசிய அந்த வீடியோவை போட்டு காட்டியதும் அனைவரும் அதிர்ச்சியாகிறார் கள். "பிசினஸ் செய்யும் போது ஏமாறுவது என்பது சகஜம் தான். ஆனால் அதை ஏன் மறைத்து வீட்டில் பொய் சொல்ல வேண்டும்" என அண்ணாமலை கேட்கிறார்.

 

"எனக்கு அந்த 4 லட்சம் பணம் எங்க இருந்து வந்தது என தெரிஞ்சாகணும்" என மனோஜை மிரட்ட எங்கே மனோஜ் உண்மையை உளறிவிட போகிறனோ என பயந்து விஜயா இடையில் புகுந்த மனோஜை அடி அடி என அடிக்கிறாள். "ஏன் பொய் சொன்ன? பணத்தை யார் கிட்ட கடன் வாங்கின" என மாறி மாறி கேட்டு மனோஜுக்கு ஹிண்ட் கொடுக்கிறாள்.
 
விஜயா மனோஜை காப்பாற்றுவதற்காக தான் இப்படி ட்விஸ்ட் செய்கிறாள் என்பதை மீனாவும் முத்துவும் புரிந்து கொள்கிறார்கள்.

"நான் என்னோட பார்க் ப்ரெண்ட்கிட்ட கடன் வாங்கினேன் என சொல்லி சமாளிக்கிறான்" மனோஜ். "அடிக்காதீங்க ஆண்ட்டி. அவர் யாரையும் ஏமாத்தலையே. அவர் தான் ஏமாந்து போய் இருக்காரு" என ரோகிணி மனோஜூக்கு சப்போர்ட் செய்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.
Continues below advertisement
Sponsored Links by Taboola