வணக்கம் டா மாப்ள தேனியிலிருந்து என சொல்லியே ட்ரெண்ட் ஆனவர் அருண்குமார்.சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த நீயா நானா எனும் டாக் ஷோவில் பங்குபெற்ற இவர், ஷோ முழுவதும் ஆவேசமாகவே இருந்தார். நீயா நானா செட்டை அமுளி துமுளி செய்து ரணகல பூமி ஆக்கிவிட்டார் அருண். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, ஒரு யூடியூப் சேனல் ஒன்றில்  பேட்டி கொடுத்து இருந்தார்.


என்ன தான்  நடந்தது நீயா நானா ஷோவில் என நெறியாளர் கேட்க, சேனல்ல இருந்து போன் பண்ணாங்க அப்புறம், டிக்கெட் அனுப்பி விட்டாங்க.  சென்னை வந்து சேர்ந்ததும், ஏதோ தகர டப்ப மாறி ஒன்னு இருந்துச்சு; அதுக்குள்ள போக சொன்னாங்க. உள்ள போய் பாத்த பயங்கரமா இருந்துச்சு.


எடுத்த ஒடனே மேல ஒக்காந்தவன் கிட்ட கேள்வி கேட்டாங்க, அப்புறம் கிழ இருக்க என் கிட்ட கேள்வி கேட்க ஆரம்பிச்சுடாங்க. ஒருத்தவன் ஏன் ஆபாசமா வீடியோ போட்றீங்க-னு கேட்டான். நான் எங்கடா போட்டேன்.. அது எல்லாம் எடிட் பண்ணி போட்டது. எனக்கு பொம்பளைங்க பத்தி தப்ப பேசனாலே கோவம் வந்துடும். ஏண்டா நீங்க ஏன் அந்த மாதிரி வீடியோவ விரும்பி பாக்குறனு கேக்கறதுக்குள்ள லாக் பண்ணிடாங்க.. நம்பள பேசவே விட மாட்ராங்க.





அது வரைக்கும்  ஒரு ஆளுதான் கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க .அப்புறம் பூரா பயலும் கேள்வி கேக்க ஆரம்பிச்சுடாங்க.  ஒருத்தர்- னா சமளிக்கலாம், ஆனா பத்து பேர் ரவுண்டு கட்டி கேள்வி கேக்கறாங்க. நறைய பேசினேன், ஆனா எல்லாத்தையும் கட் பண்ணிடாங்க.. இத பாத்துட்டு, “ஏன் மாமா நீயும் இலக்கியாவும் போட்டோ எடுத்துடீங்களா-னு ” என் அக்கா மகன் கேள்வி கேக்குறான். இலக்கியாவ நான் நேர்ல பாத்துருப்பேனா ? என்ன பாத்தா அப்பிடியா இருக்கு என கூறினார் அருண்.


உங்கள டார்கெட் பண்ண மாரி இருந்துச்சா அருண் அண்ணா என கேட்க,  ஆமா எல்லாரும் வந்தாங்க, பேமஸ் ஆவரது பெருசு. இல்ல பின்னாடி வர பிரச்சனைய சமாளிக்கனும். 50 பேர் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவேன், ஆனா மைக்-க வாங்கிட்டாங்க. நீதான மைக்-க குடுத்த ஏன் வாங்குற-னு அவங்கட்ட கேட்டேன். விஜய் டி.வி காரங்க அன்பா தான் அலச்சாங்க, மெரினா பீச்செல்லாம் கார்ல சுத்தி காட்னாங்க.. வீடியோகூட இருக்கு. நல்லா தான் பார்த்துக்கிட்டாங்க.




நானா ஒழச்சு இந்த டி.வி-ல நிக்குறன்னு கோபிநாத் சொன்னாரு ; அதான் நானும் சொல்றேன், வணக்கம் டா மாப்ளயா ஒழச்சு நானா நிக்குறன். பணத்துக்காக இப்படிலாம் பண்ணல, கோவம்  வந்துடுச்சு, அதான் போனை குடுத்து டெலீட் பண்ண சொன்னேன் எவன் சொல்லுவான் இத மாரி, கட்டுண வீட்ட இடிக்கச் சொல்வாங்களா?


இந்த சீன் லாம் கட் பண்ணிட்டாங்க , இதலாம் போட்டு  இருக்கனும்-ல .. 2 லட்சம் பேரு இருக்காங்க எனக்கு பணம் ல முக்கியம் இல்ல , விவசாயம் இருக்கு புலச்சுக்க. இதெல்லாம் மூடி மறச்சுடாங்க..என பேசி முடித்தார் ‛வணக்கம்டா மாப்ள’ தேனி அருண்.