Tamil Serials TRP Ratings: டிஆர்பி ரேட்டிங்கில் அடித்துக் கொள்ளும் சீரியல்கள்...ரசிகர்களின் மனம் கவர்ந்தது எது?

வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. 

Continues below advertisement

சின்னத்திரை சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருவதால் சுவாரஸ்யமான எபிசோட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Continues below advertisement

வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.  என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியல்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பார்வையாளர்களின் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது. இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்கின்றது. 

என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பது என்னவோ சில சீரியல்கள்,நிகழ்ச்சிகள் மட்டும் தான். குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இங்கு நடைபெறும் போட்டி என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஒருகாலத்தில் தங்களை அடிக்க ஆளே இல்லை என நினைத்த சன்டிவியை விஜய், ஜீ தமிழ் சீரியல்கள் ஓரம் கட்டியது தனிக்கதை. ஆனால் சமீபகாலமாக பார்க்கும் போது சன் டிவி சீரியல்கள் மீண்டும் தாங்கள் விட்ட இடத்தை பிடித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வார ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10.59 புள்ளிகளுடன் கயல் (சன் டிவி) சீரியல் முதலிடமும்,9.90 புள்ளிகளுடன் வானத்தைப்போல (சன் டிவி) இரண்டாமிடமும், 9.78 புள்ளிகளுடன் சுந்தரி (சன் டிவி) 3 ஆம் இடமும்,ரோஜா (சன் டிவி) 8.50 புள்ளிகளுடன் 4வது இடமும், 8.28 புள்ளிகளுடன் கண்ணான கண்ணே (சன் டிவி) 5 ஆம் இடமும், இதேபோல் 8.23 புள்ளிகளுடன் செவ்வந்தி சீரியல் (சன் டிவி) 6வது இடம் பிடித்துள்ளது. 

மேலும் 7.95  புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் (விஜய் டிவி)  7 ஆம் இடமும் பெற்றுள்ளது.  7.39 புள்ளிகளுடன் ஆனந்த ராகம் (சன் டிவி) 8வது இடத்தையும், 7.10 புள்ளிகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல் (விஜய் டிவி)  9வது இடமும், 6.18 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் (விஜய் டிவி) 10வது இடமும் பெற்றுள்ளது. டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பெரும்பாலான இடங்களை சன் டிவி பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

Continues below advertisement