TV Serials TRP Ratings: டிஆர்பி ரேட்டிங்கில் சமீபகாலமாக விஜய் டிவி சீரியல்கள் பின்னடைவை சந்தித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.  என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பேவரைட்டான ஒன்றாகவே உள்ளது. இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அறிமுகம் செய்கின்றது. 






என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பது என்னவோ சிலது மட்டும் தான்.  குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இங்கு நடைபெறும் போட்டி என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஒருகாலத்தில் தங்களை அடிக்க ஆளே இல்லை என நினைத்த சன்டிவியை விஜய், ஜீ தமிழ் சீரியல்கள் ஓரம் கட்டியது தனிக்கதை. 






ஆனால் விஜய் டிவி சீரியல்கள் கடந்த சில மாதங்களாக சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் பின்னால் இருந்த சன் டிவியின் பல சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடங்களை பிடித்துள்ளது. 10.63 புள்ளிகளுடன் கயல் (சன் டிவி) சீரியல் முதலிடமும், 10.50 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி (விஜய் டிவி) இரண்டாமிடமும், 9.88 புள்ளிகளுடன் வானத்தைப்போல (சன் டிவி) 3 ஆம் இடமும், ரோஜா (சன் டிவி) 9.43 புள்ளிகளுடன் 4 ஆம் இடமும், 8.67 புள்ளிகளுடன் கண்ணான கண்ணே (சன் டிவி)  5 ஆம் இடமும் பெற்றுள்ளது. 




இதேபோல் 8.56 புள்ளிகளுடன் சுந்தரி (சன் டிவி)  6 ஆம் இடமும், 8 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் (சன் டிவி)  7 ஆம் இடமும், 7.37 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் (விஜய் டிவி) 8 ஆம் இடமும், 7.24 புள்ளிகளுடன் பாரதி கண்ணம்மா (விஜய் டிவி) 9 ஆம் இடமும், அபியும் நானும் (சன் டிவி)  5.51 புள்ளிகளுடன் 10 இடமும் பெற்றுள்ளது.