பாக்கியலட்சுமி சீரியலில் மகள் இனியா வீட்டுக்கு வருமாறு அழைத்தும் பாக்யா வர மறுக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


வீட்டுக்கு வரும் எழிலிடம் வீட்டில் உள்ளவர்கள் பாக்யாவை பற்றி விசாரிக்கின்றனர். தான் கூப்பிட்டால் அம்மா நிச்சயம் வருவார் என ஈஸ்வரியிடம் இனியா கூறுகிறார். அவரும் சரி போய் கூப்பிட்டு வா என ஜெனியுடன் இனியாவை அனுப்பி வைக்கிறார். பாக்யா இருக்கும் ஆபீஸிற்கு வரும் இனியா அங்கு அம்மாவை எவ்வளவோ கெஞ்சி கூப்பிட்டும் நான் வரவில்லை என அவர்வர மறுக்கிறார். நான் இனிமேல் ஒழுங்காக இருப்பேன் என இனியா கூற இத்தனை நாட்களாக உங்களுக்காக தான், இந்த குடும்பம் உடைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் நான் பொறுமையாக இருந்தேன். உடனே வேலைக்காரி செல்வி இனியாவிடம், உனக்கு இப்பத்தான் உங்க அம்மாவோட அருமை தெரியுதா? என கேட்கிறார்


ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு நான் எப்படி அங்கு வர முடியும் நீ போ..நான் இப்ப வந்தா நல்லாருக்காது என பாக்யா தெரிவிக்கிறார்.உடனே கோபத்தில் இனியா அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் போட்டுடைத்து விட்டு கோபத்தில் அழுதுக் கொண்டெ வீட்டுக்கு செல்கிறார். ஜெனியும் எனக்கு என்ன ஆறுதல் சொல்ல என தெரியவில்லை. ஆனால் என்ன நடந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். 


இதற்கிடையில் வீட்டில் கீழிலிருந்து மாடிக்கு செல்ல கோபி மேலே ஏறும் போது மேலிருந்து கீழே எழில் முறைத்துக் கொண்டே இறங்குவதை பார்க்கிறார். தன்னை தவிர்க்க நினைக்கும் கோபியைப் பார்த்து எழில், எதுக்காக இப்படி செய்தீர்கள். எத்தனை முறை உங்களிடம் சொன்னேன். இப்படி ஒரு நிலைமைக்கு குடும்பம் போய்விடக் கூடாதுன்னு தான்  சொன்னேன். இப்ப உங்களை தவிர வீட்டில்  எல்லோரும் அம்மா எப்போது வருவார்கள் என கேட்கிறார்கள் என தனது ஆதங்கத்தை கூறுகிறார். 


வீட்டிற்கு வரும் இனியா ஈஸ்வரியிடம் நான் எவ்வளவும் கெஞ்சி கேட்டும் அம்மா வரவில்லை என சொல்லிவிட்டார்கள் என கூறுகிறார். உடனடியாக ஜெனி குறுக்கிட்டு அவர்கள் அப்படி எல்லாம் அவர்கள் சொல்லவில்லை. நான் இப்ப வந்தா நல்லாருக்காதுன்னு தான் சொன்னாங்க என தெரிவிக்கிறார். அதற்கு பாக்யாவின் மூத்த மகன் செழியன் ஆனாலும் அம்மாவுக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்கக்கூடாது என கோபப்படுகிறார். 


அதற்கு ஜெனி என்ன செழியா பேசுற.. அங்கிள் ஒரு சாரி கேட்டா எல்லாம் சரியா போயிடுமா..இதே மாதிரி நான் பண்ணிட்டு வந்து சாரி கேட்டா உன்னால ஏத்துக்க முடியுமா..பாக்யா ஆன்ட்டி ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க..அவங்களுக்கு நாம மீண்டு வர்றதுக்கு டைம் கொடுக்கணும் என சொல்வதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் பாக்யா எப்போது ராதிகா வீட்டுக்கு சென்று நியாயம் கேட்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண