ஒரு சினிமாவின் வெற்றி என்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மூலம்  நிர்ணயிக்கப்படுகிறது. அதே போல சின்னத்திரை நிகழ்ச்சிகளின் வெற்றியை குறிக்கும் கணக்கீடாக விளங்குகிறது TRP ரேட்டிங். 'டார்கெட் ரேட்டிங் பாய்ண்ட்' என்பது தான் சுருக்கமாக TRP ரேட்டிங் என அழைக்கப்படுகிறது. பார்வையாளர்களை அளவீடாக கருதப்படும் இந்த TRP ரேட்டிங் விகிதத்தை வைத்து தான் எந்த சீரியல் முன்னிலை வகிக்கிறது என்பது கணிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் 48வது வாரத்திற்கான TRP ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




சன் டிவியில் சமீபத்தில் துவங்கிய சீரியல் தான் என்றாலும் துவங்கிய நாள் முதல் இன்று வரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 'சிங்கப்பெண்ணே' சீரியல். கிராமத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக நகரத்தில் வேலை தேடி செல்கிறாள். அவள் சென்ற இடத்தில் அவள் சந்திக்கும் தடங்கல்கள், சவால்கள் உள்ளிட்டவையை மையாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக ஈர்த்து இரண்டே மாதங்களில் 11.80 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 


பல வாரங்களாக முன்னிலை வகித்து வந்த கயல் தொடர் 11.16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் 10.42 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியலும் கைப்பற்றியுள்ளது. பல வாரங்களாக முதலிடத்தை விட்டு இறங்காமல் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்த இயக்குநர் திருச்செல்வத்தின் 'எதிர்நீச்சல்' தொடர் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 9.89 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆதி குணசேகரன் கதாபாத்திரம் தான் எதிர்நீச்சல் சீரியலின் ஆணிவேராக இருந்த நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் 'எதிர்நீச்சல்' சீரியலை பின்னடைய செய்தது. 


ஆதி குணசேகரனாக நடிகர் வேல ராமமூர்த்தி தன்னுடைய தனித்துமான நடிப்பால் சிறப்பாக நியாயம் செய்து வந்தாலும் நடிகர் மாரிமுத்து உருவாக்கி வைத்த அந்த பெஞ்ச்மார்க்கை அவரால் எட்ட முடியவில்லை என்பது 'எதிர்நீச்சல்' சீரியலின் TRP ரேட்டிங் சரிய காரணமாக அமைந்தது என்பது ரசிகர்களின் கருத்து. 


முதல் மூன்று இடங்களை தக்க வைத்து வந்த அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட 'வானத்தை போல' தொடர் 9.59 புள்ளிகளை பெற்று  ஐந்தாவது இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை 8.52 புள்ளிகளுடன் 'இனியா' சீரியல் கைப்பற்றியுள்ளது. ஏழாவது இடத்தை 8.28 TRP புள்ளிகளுடன் ஆனந்த ராகம் சீரியல் இடம்பெற்றுள்ளது. 


வரிசையாக சன் டிவி சீரியல்கள் முன்னிலை வகித்து வந்த நிலையில் எட்டாவது இடத்தை விஜய் டிவியின் பிரபலமான தொடரான 'பாக்கியலட்சுமி' தொடர் 7.98 TRP புள்ளிகளுடன் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை 7.83 TRP புள்ளிகளுடன் 'சிறகடிக்க ஆசை' சீரியலும் 7.21 TRP புள்ளிகளுடன் விஜய் டிவியின் 'ஆஹா கல்யாணம்' சீரியல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.